பக்கம் எண் :

301

‘வாழ்தல் வேண்டும் இவண்வரைந்த வைகல்’           புறம். 367-9

‘அஞ்சாமை அஞ்சுவது ஒன்றின்’

முதலிய வியங்கோள் முற்றுக்களும், ஏவல் திறத்து வருஉம் உண்ணும் தின்னும் முதலிய முன்னிலை ஏவல் பன்மை வினைமுற்றுக்களும், அல்லும் ஆலும் ஏலும் காணும் என்னும் இவ்வீற்று உண்ணல் மறாஅல் அழேல் சொல்லிக்காண் முதலிய முன்னிலை ஏவல் ஒருமை வினை முற்றுக்களும், உண்ணலன் உண்ணான் முதலிய எதிர்மறை வினைமுற்றுக்களும் எனச் சொல்லப்படுவன ஆகிய பகுபதங்கள் எல்லாம் எதிர்காலமும், செய்யும் என்னும் வாய்பாட்டான்வரும் உண்ணும் தின்னும் முதலிய வினைமுற்றுப் பகுபதங்கள் நிகழ்கால எதிர்காலங்களும் இடைநிலை எலாது பொருள்பெறக் காட்டும் என்று கூறுவர் அறிந்தோர் என்றவாறு.

உண்ணாநிற்ப எனப் பவ்வீற்று உயர்திணைப் பன்மை வினைமுற்று நிகழ்காலமும், உண்டிலன் உண்ணாநின்றலின் முதலிய எதிர்மறை வினைமுற்றுக்கள் முறையே இறந்தகாலமும் நிகழ்காலமும் காட்டும் பிறஎனின், அவை இடைநிலை பெற்று அவற்றால் காலம்காட்டின. ஈண்டு ஓதியன இடைநிலை பெறாது காலங்காட்டின என்க.

‘மெய்பெற’ என்றதனால்.

‘கழிந்தது பொழித்தென வான்கண் மாறினும்
தொல்லது விளைந்தென நிலம்வளம் சுரப்பினும்’           புறம். 203-1, 2

எனப் பொழிந்து விளைந்து என்னும் துவ்வீற்றுத்தன்மை ஒருமை வினைமுற்றுக்கள் இறந்தகாலமும்,

‘சிறுகண் யானையொடு பெருந்தேர் எய்தி
யாம்அவண் நின்று வருதும்’           சிறுபாண். 142-3