பக்கம் எண் :

302

எனத் தும்மீற்றுத் தன்மைப் பன்மை வினைமுற்று நிகழ் காலமும் சிறுபான்மை காட்டும் எனவும் கொள்க.

இன்னும் அதனானே, ஈண்டு ஓதிய காலத்தில் பிறழ்ந்து வருவன உளவாயின் அவையும், இவ்விடைநிலை ஏலாப் பெயரெச்ச வினையெச்சங்களும், என்மனார் என்றிசினோர் முதலிய வினைத்திரிசொற்களும் காலம் காட்டும் இயல்பு அறிந்து முடித்துக்கொள்.

இன்னும் அதனானே, வினைக்குறிப்பு முற்றுப் பகுபதங்கள் இடைநிலை வகையானும் ஈற்று வகையானும் அன்றிக் குறிப்பானே ஏற்றவாறு முக்காலமும், நடவா முதலிய முன்னிலை ஏவல் ஒருமை வினைப்பகாப்பதங்கள் எதிர்காலமும் எனவும் கொள்க. ஈண்டு செல்லா தொழிந்த இவற்றின் விகற்பம் எல்லாம் மேல் சொல் ஓத்தினுள் வினையியலுள் காண்க.

இனி இவ்வாறு அன்றி,

றவ்வொடு உகரஉம்மை நிகழ்பு அல்லவும்
தவ்வொடு இறப்பும் எதிர்வும் டவ்வொடு
கழிவும் கவ்வொடு எதிர்வும் மின்ஏவல்
வியங்கோள் இம்மார் எதிர்வும் பாந்தம்
லெவொடு வரவும் செய்யும்நிகழ்பு எதிர்வும்
எதிர்மறை மும்மையும் ஏற்கும் ஈங்கே நன். 145

எனக் கூறுவாரும் உளர். காலங்காட்டுவனவாகப் பின்னுள்ளோர் விதந்து ஓதிய எழுத்துக்கள் தம்முள் மயங்கியும் வருதலின் அதுபற்றிக் காலம் காட்டும் எழுத்துக்களை ஆசிரியர் தொல்காப்பியனார் எடுத்து ஓதார் ஆயினாரேனும், இடைநிலை வகையானும் இறுதிநிலை வகையானும் காட்டுதும் எனக் காலம் காட்டிய புகுந்த உரையாசிரியரை உன்னிட்டோரால் அவ்வாறு கூறப்படாமையின் அஃது இலக்கணம் அன்று என மறுக்க. 13