பக்கம் எண் :

303

விளக்கம்: உண்ணலன் உண்ணான் முதலிய எதிர்மறை வினைமுற்றுக்கள் எதிர்காலம் காட்டும் என்பது இவர் கருத்து,

உண்ணாநிற்ப-ஆநில்நிகழ்கால இடைநிலை.
உண்ணாநின்றிலன்-ஆநின்று

,,

உண்டிலன்-ட்இறந்தகால இடைநிலை
பொழிந்து-துவ்வீறுநிகழ்காலம் காட்டியது
விளைந்து- ,, ,,
வருதும்-தும் ஈறு ,,

என்மனார்-இறந்தகால வினைமுற்று-
நிகழ்கால வினைமுற்று-
எதிர்கால வினைமுற்று-
தெய்வச்சிலையார்.
நச்சினார்க்கினியர்.
சேனாவரையர்.

நன்னூலார் கருத்துப் பண்டை உரையாசிரியர்கள் குறிப்பிட்டவற்றொடு மாறுகோடலின், அவர் குறிப்பிடும் ‘றவ்வொடு உகர உம்மை’ என்ற நூற்பா நன். 145 இவ்வாசிரியரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

‘கழிந்தது..............சுரப்பினும்’ என்புழிப் பொழிந்து விளைந்து என்பன இறந்தகாலம் உணர்த்தின எனச் சொற்படல 205ஆம் நூற்பா உரையிலும்,

‘சிறுகண் யானையொடு பெருந்தேர் எய்தி
யாம்அவண் நின்றும் வருதும்’           சிறுபாண். 142-3

எனத் தும்மீறு சிறுபான்மை நிகழ்காலம் உணர்த்தும் என 204ஆம் நூற்பா உரையிலும் நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளனவற்றை இவ்வாசிரியர் ஏற்று வரைந்துள்ளார்.