பக்கம் எண் :

304

ஒத்த நூற்பா :

‘றவ்வொடு............ஈங்கே.’           நன். 145

வினைக்குறிப்பிடைநிலை

51. இலக்கியம் கண்டுஅதற்கு இலக்கணம் இயம்பலின்
பகுதி விகுதி பகுத்திடை நின்றதை
வினைக்குறிப்பு இடைநிலை என்னல் வேண்டும்.

இது வினைக்குறிப்பு முற்றுப் பகுபத இடைநிலை கூறுகின்றது.

இ-ள்: முற்காலத்தில் கண்டாதிய இலக்கியத்திற்கு இலக்கணம் கூறலின், ஈண்டு முடிக்கலுறும் பதத்தின் பகுதியையும் விகுதியையும் பிரித்து வேறு இடைநின்றதனை வினைக்குறிப்பு முற்றுப் பகுபதத்தின் இடைநிலை என்று சொல்லுதலை விரும்பும் ஆசிரியன் என்றவாறு.

இவை காலம் காட்டாது வாளா நிற்பினும். இடை நிற்றலான் இடைநிலை ஆம் என்பார் ‘இடைநிலை என்னல் வேண்டும்’ என்றார்.

வரலாறு: கச்சினன் நாட்டினன் ஐயாண்டினன் தோளினன் அருளினன் வரவினன் எனவரும். பிறவும் அன்ன. இன் ஈண்டுச்சாரியை அன்று, இடைநிலை; உறங்கினான் என்புழிப்போல. 14

விளக்கம்: உறங்கினான் என்ற தெரிநிலை வினைப்பகுபதத்தில் காலம் காட்டும் ‘இன்’ என்ற இடைநிலை இருப்பது போலக் கச்சினான் என்ற குறிப்பு முற்றுப் பகுபதத்தின்கண் காலம் காட்டாத பிறிதோர் ‘இன்’ இடைநிலை வந்துள்ளது என்பது இவர் கருத்து. காலங் காட்டும் இன் என்ற இடைநிலை, காலங் காட்டாத இன்