305 என்ற இடைநிலை, இன் என்ற சாரியை இவை வடிவான் ஒன்றே ஆயினும், வெங்வேறு சொற்களே என்பது அறிக. இலக்கண விளக்கச் சூறாவளி கச்சினன் நாட்டினன் என்புழிவரும் இன் ஈண்டுச் சாரியை அன்று, உறங்கினான் என்புழிப்போல இடை நிற்றலான் இடை நிலையாம் என்றார். அதனை மறந்து. ‘பதமும் விகுதியும்’ என்னும் சூத்திரத்துள், ‘உண்டது ஊரது என்றாற்போல்வன சாரியை வர வேண்டியே நின்றன’ என்றார். இங்ஙனம் முன்னொடு பின் மயங்கக் கூறுதல் அவர் இயல்பு என்க. அமைதி ‘இன்’ சாரியைபோல ‘இன்’ இடைநிலையும் ஒன்றுண்டாகலானும், அது வினைக்குறிப்பின்கண் வந்து குறிப்பால் காலம் காட்டுதற்கு உதவுதலானும், கச்சன் நாட்டன் போல வினைக்குறிப்பு வழக்கின்கண் இன்மையானும் இதனை இடைநிலை என்றற்கண் இழுக்கின்மை அறிக. காலம் காட்டாப் பெயர் இடைநிலைபோல, காலத்தைக் குறிப்பால் காட்டும் இன்’ இடைநிலையும் கோடல் வேண்டும் என்பது. ஒத்த நூற்பா: ‘இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பலின் பகுதி விகுதி பகுத்துஇடை நின்றதை வினைப்பெயர் அல்பெயர்க்கு இடைநிலை எனவே’ நன். 141 வினை வினைக்குறிப்புப் பெயரிடைநிலை 52. விளம்பிய இடைநிலை வினைப்பெயர்க் கண்ணு ஏற்பன கோடல் இயல்புஎன மொழிப. |