பக்கம் எண் :

306

இது வினை வினைக்குறிப்புப் பெயர்ப்பகுபதங்கட்கு இடைநிலை ஆமாறு மாட்டெறிந்து உணர்த்துகின்றது.

இ-ள்: மேல்வினை வினைக்குறிப்பு முற்றுப் பகுபதங்களுக்கு ஓதிய இடைநிலைகள் அவ்விரு பெயரிடத்தும் பொருந்துவன கொணர்ந்து முடித்தல் இயல்பாம் என்று கூறுவர் புலவர் என்றவாறு

வரலாறு: நக்கான் விட்டான் உரைத்தான் உற்றான் பருகினான் எனவும், நடவாநின்றான் நடக்கிறான் நடக்கின்றான் எனவும், உண்பான் உறங்குவான் எனவும், கச்சினான் கழலினான் எனவும் வரும், இவற்றைப் பகுத்துக் கூறுக. உண்டவன் உரைத்தவன் உண்ணாநின்றவன் உண்பவன் முதலிய வினைப்பெயர்கள் இவ்விடைநிலை பெற்றவாறும். வானவன் மீனவன் வில்லவன் எல்லவன் கதிரவன் கரியவன் முதலியன வகர இடைநிலை பெற்றவாறும், சேரமான் கட்டிமான் முதலியன மகர இடைநிலை பெற்றவாறும், வலைச்சி பனத்தி மலையாட்டி என்பன முறையே சகர தகர டகர இடைநிலை பெற்றவாறும், செட்டிச்சி தச்சிச்சி முதலியன இச்சென்னும் இடைநிலை பெற்றவாறும் காண்க. பிறவும் அன்ன.

இனி, ஈண்டு ஓதிய பகுதி முதலிய மூன்றானும் மேல் புணரியலுள் ஓதப்படும் சாரியை முதலிய மூன்றானும் பகுபதம் முடிக்குமாறு.

நடந்தான் என்னும் உயர்திணை ஆண்பால் ஒருமைப் படர்க்கை இறந்தகால இயற்றும் வினைமுதல் வினைமுற்றுப்பகுபதம் முடிப்புழி, நடத்தலைச் செய்தான் என்னும் தொழில் தோன்ற ‘நடவா’43 என்பதனான் நட என்னும் அகர ஈற்றுப் பகுதியை முதல்வைத்து’ அதன்மீதே ‘அன்ஆன்’ 232 என்பதனான் உயர்திணை ஆண்பால் ஒருமைப் படர்க்கை உணர்த்தும் ஆன்