308 இப்பொழுது நாளை என முறையே இப்பொருளை உடையனாய் இருத்தலைச் செய்தான் செய்கின்றான் செய்வான் என்பவற்றுள் ஏற்பது ஒருகாலம் குறிப்பால் தோன்றப் ‘பொருள் இடம் காலம்’ 45 என்பதனான் கச்சு என்னும் பகுதியை முதல்வைத்து, அதன்மீதே அன் என்னும் விகுதியை நிறுவி, ‘இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பலின்’ 51 என்பதனான் இன் இடைநிலை வருவித்து, ‘குற்றியலுகரத்து இறுதி முன்னும்’ 65 என்பதனானும் ‘புள்ளி யீற்றுமுன்’ 64 என்பதனானும் குற்றுகரத்தின்மீதே இடைநிலை இகரத்தையும் னகர ஒன்றின்மீதே விகுதி அகரத்தையும் ஏற்றி ஒரு மொழி ஆக்கிக் கச்சினன் என முடிக்க, இவ்வாறே குறிப்பு வினைமுற்றுப் பகுபதங்கள் எல்லாம் ஏற்ற பெற்றி அறிந்து முடித்துக் கொள்க. உண்டான் உண்டவன் கரியான் கரியவன் முதலிய வினை வினைக்குறிப்பு முற்றுப்பெயர்களை முறையே இத்தொழிலைச் செய்தவன் இன்னனாய் இருந்தவன் என்னும் தொழின்மையும் பொருண்மையும் தோன்ற முடித்துக்கொள்க இன்னும் பனவன் அரசன் வாணிகன் உழவன் கணக்கன் வலையன் தச்சன் வண்ணான் கணவாளன் எனவும், பனத்தி அரசி வாணச்சி உழத்தி கணக்கச்சி வலைச்சி தச்சிச்சி வண்ணாத்தி கணவாட்டி எனவும் வரும் இத்தொடக்கத்துக் குறிப்பு வினைமுற்றுப் பெயர்ப் பகுபதங்களை இன்ன குலத்தார் என்னும் பொருண்மை தோன்ற முடித்துக்கொள்க. இன்னோரன்ன பிறவாற்றான் வரும் பகுபதங்களையும் இதுவே நிலனாக முடித்துக்கொள்க. 15 இரண்டாவது பதிவியல் முற்றிற்று. விளக்கம் : வினைமுற்றுப் பகுதியில் பொருள் சிறக்கும்’ வினைமுற்றுப்பெயர் பகுதியில் பொருள் |