309 சிறவாது எனவே, வினைமுற்றைப் பெயராக்கவேண்டின் பகுதியைப்படுத்தல் ஓசையாற் கூறல்வேண்டும் என்பது. | ப | ச | இ | சா | வி | விகா | நடந்தான் | நட | த் | த் | | ஆன் | ந் | நடந்தது | நட | த் | த் | அ | து | ந் | நடந்தேன் | நட | த் | த் | | ஏன் | ந் | நடந்தாய் | நட | த் | த் | | ஆய் | ந் | நடப்பித்தான் | நடப்பி | த் | த் | | ஆன் | | கச்சினன் | கச்சு | | இன் | | அன் | | உண்டான் | உண் | | ட் | | ஆன் | | உண்டவன் | உண் | | ட் | அ | அன் | |
பனவ குலத்தினன் பனவன்; அரச குலத்தினன் அரசன்; வணிக குலத்தினன் வணிகன்; உழவு, கணக்கு, வலைமை தச்சு, வண்ணாரம், கணவாளம் ஆகிய தொழிலான் முயன்று உண்பவன் முறையே உழவன் கணக்கன் வலையன் தச்சன்வண்ணான் கணவாளன் எனக்காண்க. இக்குறிப்பு வினைமுற்றுப் பெயர்ப்பகுபதங்களை வடநூலார் தத்திதப்பெயர் என்ப. ‘முன்சொல் தன்னைத் துன்னும் தொடர்மொழி எல்லாம் ஒழித்துப் போய்ச் சேரும் பிரத்தியயத்தை உடைய சொல்லே தத்திதாந்தத்தை உடைய சொல்லாம்’-பிர. விவே. தத். 1 உரை’ ‘வலையான் முயன்று உண்பவன் வலையன்- யகரம் இடைநிலை. வேதத்தை உரைப்பான் வேதியன்-அம் குறைந்து இகரம் மிக்கது. கொந்தத்தை உடையவன்-கொந்தன் ஈறு அழிந்தது. மருந்தைப் பண்ணுவான் மருத்துவன்- மெல்லொற்று வல்லொற்றாயிற்று |