310 கூத்துப் பயில்வான் கூத்தன்; வல்லினால் பயன் கொள்வான் வல்லி; சோதிடத்தை எண்ணுவான் சோதிடன்; அதிதி மகன் ஆதித்தியன்-கடை குறைந்து நடுவே தகரம் மிக்கு ஆதி நீண்டது; திதி மகன் தைத்தியன்; விநதை மகன் வைநதேயன் கங்கை மகன் காங்கேயன்; சிபி வருக்கத்தான் செம்பியன்-மகரம் தோன்றியது இகரம் எகரமாயிற்று; குரு வருக்கத்தான் கௌரவன்-உகரம் ஒளகாரமாயிற்று; புத்தனை வணங்குவான் பௌத்தன்; சிவனை வணங்குவான் சைவன்; பசுபதியை வணங்குவான் பாசுபதன்; பூனைக்காலை ஒப்பக் காய்ப்பது பூனைக்காலி; குலத்தில் விழுமியான் குலினன்; வியாகரணம் ஓதுவான் வையாகரணன்; துவாரத்தில் (வாயிலில்) நிற்பான் தௌவாரிகன்; குணத்தை உடையான் குணவான்; மதியை நன்கு உடையான் மதியான்; கள்ளத்தை உடையான் கள்ளன்’ குங்குமத்தால் ஊட்டப்பட்டது கௌங்குமம்; இருடி சம்பந்தம் உடையது ஆரிடம்; பார்ப்பானால் செயற்படுவது பார்ப்பு”-வீ 53, 54 உரை. பிரயோக விவேகம் 31, 32 நூற்பா உரையும் நோக்குக. ‘கைவாரம் கொள்வானைக் கைவாரி எனவும், திரு இல்லாதானைத் திருவிலி எனவும், அறிவு இல்லாதானை அறிவிலி எனவும், நூல் ஓதினானை நூலோதி எனவும், |