311 இவ்வாறே ஈறு திரிந்து வருவனவும் பிறவும் பிரித்துக் காட்டுக வில்லி வாளி-வினைக்குறிப்புமுற்று ஈறுதிரிந்த பெயர். வலைச்சி பனத்தி வெள்ளாட்டி முதலியன சகரமும் தகரமும் டகரமுமாகிய இடைநிலை பெற்றன. செட்டிச்சி கணக்கச்சி முதலியன இச் என்னும் இடைநிலை பெற்றன. கணவாட்டி-இவ்வினைப்பெயர் டகரம் பெற்றது. இவ்வாறே வருவன பிறவும் பிரித்துக்காட்டுக.’-தொல். சொல். 463 நச். உரை மயிலைநாதரும் அரசன் வாணிகன் உழவன் வேளாளன் கணக்கன் குந்தவன் தலையன் உவச்சன் வண்ணாண் கணவாளன் முதலிய ஆண்பாற் பெயர்ப் பகுபதங்களையும் அரசி, பார்ப்பனி வாணிச்சி உழத்தி தச்சிச்சி முதலிய பெண்பாற் பெயர்ப்பகுபதங்களையும் நன்னூல் 144ஆம் நூற்பா உரையுள் முடித்துக் காட்டுவர். இவ்வாறே, | ப | ச | இ | சா | வி | விகாரம் | மலையன் | மலை | | | | அன் | | மலையது | மலை | | | அ | து | | மலையான் | மலை | | | | ஆன் | | நிலத்தன் | நிலம் | த் | த் | | அன் | | நிலத்தது | நிலம் | த் | த் | அ | து | | நடந்தான் | நட | த் | த் | | அன் | ந் |
என்று பிரித்துக்காட்டி அந்நூற்பா உரையிலேயே விதி கூறியுள்ளார். |