பக்கம் எண் :

313

‘எழுத்து-ஊண்-தீன்-கோள்-என்பன. எழுது-உண்-தின்-கொள்-என்ற வினைப்பகுதிகளோடு செயப்படு பொருளை உணர்த்தும் ஐகார விகுதி புணர்ந்து கெட்டபின் திரிந்த சொற்களாம். கெடு என்பது தல்விகுதிகெட்டு முதல் நீண்டு கேடு என ஆயிற்று, திரை நுரை அலை தளிர் என்றாற்போல்வனவும் விகுதி குன்றி முதல்நிலை மாத்திரையாய் நிற்றலின், முதல்நிலைத் தொழிற்பெயர்.

‘ஐகார விகுதி செயப்படுபொருண்மை உணர்த்துதல் நடவை சேக்கை உடுக்கை தொடை விடை என்றாற் போல்வனவற்றுள்ளும், இகர விகுதி வினைமுதல் பொருண்மை உணர்த்துதல் சேர்ந்தாரைக்கொல்லி நூற்றுவரைக் கொல்லி நாளோதி நூலோதி என்றாற் போல்வனவற்றுள்ளும் காண்க. உடுக்கை என்பது பொருட்பெயராயின் ஐகார விகுதி பெறும்; தொழிற் பெயராயின் கை என்பது விகுதியாகும்.’ நன். 145 ஆம் நூற்பா விருத்தி உரை.

இரண்டாவது பதவியல் முற்றிற்று.