பக்கம் எண் :

422

‘அரை என வரூஉம் பால் வரை கிளவிக்குப்
புரைவது அன்றால் சாரியை இயற்கை’           தொல். 165

என்ற நூற்பாவுரையில் உழக்கரை முதல் பத்தரை இறுதியாக உள்ள எடுத்துக்காட்டுக்களை நச்சினார்க்கினியர் தந்துள்ளார்.

‘குறைஎன் கிளவி முன்வரு காலை
நிறையத் தோன்றம் வேற்றுமை இயற்கை’           தொல்.166

என்ற நூற்பா உரையில் நச்சினார்க்கினியர் உரிக்குறை முதல் காற்குறை ஈறாவனவற்றைக் குறிப்பிடுகிறார்.

‘குற்றிய லுகரத்து இன்னே சாரியை’ தொல். 168 என்ற நூற்பா உரையில் நச்சினார்க்கினியர் உழக்கின் குறை முதல் பத்தின் குறை ஈறாவனவற்றைக் குறிப்பிடுகிறார்.

‘அத்திடை வரூஉம் கலம்என் அளவே’           தொல். 168

என்ற நூற்பா உரையில், அவர் கலத்துக்குறை என்ற எடுத்துக்காட்டினைச் சுட்டி அஃது உம்மைத்தொகை என்பதையும் குறிப்பிடுகிறார்.

‘பனைஎன் அளவும் காஎன் நிறையும்
நினையுங் காலை இன்னொடு சிவணும்’           தொல். 169

என்ற நூற்பா உரையில் அவர் பனையின் குறை - காவின் குறை- பனைக்குறை - காக்குறை என்பனவற்றை எடுத்து காட்டுகிறார்.

‘பதக்குமுன் வரினே தூணிக் கிளவி
முதற்கிளந்து எடுத்த வேற்றுமை இயற்றே’           தொல். 239