பக்கம் எண் :

423

என்ற நூற்பா உரையில், தூணிப்பதக்கு என்பதனையும் வருமொழி முற்கூறிய அதனால் அடையொடு வந்த இரு தூணிப்பதக்கு முத்தூணிப்பதக்கு என்பனவற்றையும், தூணித்தூணி முதல் இரு தூணிக்குத்தூணி ஈறாயவற்றையும் அவர் குறிப்பிடுகிறார்.

குறையென் கிளவி’ தொல். 166 என்ற நூற்பாவின் ‘நிறைய’ என்ற மிகையானே உரிக்கூறு - காணிக்கூறு என்பனவற்றையும்,

‘பதக்கு முன் வரினே’ தொல் 239 என்ற நூற்பாவில் வருமொழி முன் கூறிய இலேசானே, தூணிக் கொள்- சாமை-தோரை-பாளிதம்-என்பனவற்றையும்,

‘குறை என் கிளவி’ தொல்.169 என்ற நூற்பாவில் ‘முன்வரு காலை’ என்ற மிகையானே, கலம் நிலை மொழியாய் வருமொழிப் பொருட் பெயரொடு கூடும் வழியும் கலப்பாகு என்றாற் போன்ற வேற்றுமை முடிவு பெறுவனவற்றையும்,

‘பதக்கு முன் வரினே’ தொல். 239 என்ற நூற்பாஉரையில், தூணிக்கொள் என்பது பண்புத்தொகை என்று கொள்ளுதற்குரிய குறிப்பான செய்தியையும்.

‘குற்றிய லுகரத்து’ தொல். 167 என்ற நூற்பா உரையில் உழக்கின் குறை என்பது உம்மைத் தொகை; உழக்கும் குறையும் என்பது பொருள்; இது வேற்றுமைக் கண்ணாயின். உழக்கிற் குறை என நிற்கும் என்பதனையும் குறிப்பிட்டுள்ளார்.

இவை யாவும் இவ்வாசிரியரால் ஏற்ற பெற்றி இயைபுடன் எடுத்தாளப் பட்டுள்ளன.

‘அளவிற்கும் நிறையிற்கும்’ என்ற தொல்காப்பியம் 170ஆம் நூற்பாவில், நச்சினார்க்கினியர் முதலாயினார்