பக்கம் எண் :

424

அளவிற்கும் நிறைக்கும்கொடுத்த எடுத்துக்காட்டுக்களே இவ்வாசிரியராலும் தரப் பெற்றுள்ளன. நச்சினார்க்கினியர் இம்பி ஓரடை இடை ஒருஞார் ஒருதுவலி என்பன காட்டவும், இவர் ‘இம்மி இடா என்றால் போல்வன’ என்றே சுட்டியுள்ளார். எண்ணுப் பெயர் வரையறை இன்மையின் கூறார் ஆயினார் என்பதும் அவர் உரையாம்.

ஒத்த நூற்பாக்கள்:

முழுதும் தொல், 164

‘எண் நிறை அளவும் ஏயொடு சிவணும்’           மூ. வீ. பு 42

‘அரை என்.........................இயற்கை,,           தொல். 165

‘குறைஎன்.........................இயற்கை.’           தொல், 166

குற்றிய லுகரத்து இன்னே சாரியை.’           தொல். 167

‘அத்து இடை வரூஉம் கலம்என் அளவே.’           தொல். 168

‘பனைஎன்.....................சிவணும்.’           தொல். 169

‘அளவிற்கும்...................மொழிப.’           தொல். 170

‘பதக்கு............................இயற்றே.’           தொல். 239

‘அரைவரின் ஏஅகன்று ஒடும் மற்றே.’           மு.வீ.பு. 43

‘குறைவரின் வேற்றுமை கொளின் மிகும்என்ப’ 44

நாழி, உரி - வருமொழிப் புணர்ச்சி

79. உரிவரின் நாழியின் ஈற்றுயிர் மெய்கெட
மருவும் டகரம் உரியின் வழியே
யகர உயிர் மெய்யாம் ஏற்பன வரினே.

இது நாழி என்னும் அளவுப் பெயர்க்கு வருமொழி ஒன்றனோடு எய்தியது விலக்கிப் பிறிது விதியும், உரி என்னும் அளவுப் பெயர்க்கு எய்தாதது எய்துவித்தலும் நுதலிற்று.