பக்கம் எண் :

425

இ-ள்: உரி என்னும் அளவுப்பெயர் வருமொழியாய் வருங்காலத்து, நாழி என்னும் நிலைமொழி அளவுப்பெயரின் இறுதியில் நின்ற ஈற்று உயிர்மெய் கெட, அங்ஙனம் கெட்டுழி யகர உயிர்மெய் தோன்றும்; உரி என்னும் அளவுப்யெர் முன் ஏற்ற மொழிவரின் யகர உடம்படுமெய் வரும் என்றவாறு.

வரலாறு : நாடுரி எனவும், உரிய கொள் - சாமை- தோரை- பயறு - மிளகு - வரகு - உப்பு- எனவும் வரும். ‘ஏற்பன’ என்றதனான், உரியரிசி உரியெண்ணெய் முதலாயின மிகா எனக் கொள்க. வருமொழி முற்கூறிய அதனான், டகரம் மிகாது நாவுரி என்னும் முடிபும் கொள்க. 27

விளக்கம்: எய்தியது - 78ம் நூற்பாவில் கூறிய ஏஎன் சாரியை.
பிறிது விதி-இந்நூற்பாக் கூறும் திரிபு
எய்தாதது - யகர எழுத்துப் பேறு.

நாழி+உரி-நா+உரி-நாட்+உரி-நாடுரி.

உரி+அரிசி முதலியன ‘இ ஈ ஐ வழி’ என்ற நூற்பாவால்(68) யகர உடம்படு மெய் பெற்றுப் புணர்ந்தன.

இந் நூற்பா நிலைமொழி ஈற்று விகாரம் பற்றியது. எனவே, நிலைமொழியையே முன் வைத்து நூற்பாயாத்தல் வேண்டும். அங்ஙனம் செய்யாதது ஓர் இலேசு. அதனால் நாழி +உரி-நாவுரி என ழகர இகரம் கெட்டு உடம்படுமெய் பெற்றுப் புணர்ந்தமை கொள்ளப்படும்.

இவ்வுரை மயிலைநாதருடையது. நன். 173இல் வருமொழி முற் கூறியதனால் நாழியுரி என்னும் முடிவினையும் அவர் கொண்டார். நாடுரி என்பது நாவுரி என இக்காலத்து மருவிற்று என்பது நன்னூல் விருத்தி.