427 எ-டு: எங்ஙனம் அங்ஙனம் இங்ஙனம் உங்ஙனம்- ஆடை - இலை - ஈயம் - உரல் - ஊர்தி எழு - ஏணி - ஐயம் - ஒடுக்கம் - ஓடை- ஒளவியம்- எனவும், எவ்யாழ் அவ்யாழ் இவ்யாழ் உவ்யாழ் எனவும், எக்கொற்றன் அக்கொற்றன் இக்கொற்றன் உக்கொற்றன் -சாத்தன்-தேவன்-பூதன் -ஞாண்-நூல் - மணி - வளை எனவும், ஆவயினான- ஈவயினான - ஊவயினான எனவும், ‘ஆயிரு திணையின் இசைக்குமன சொல்லே’ (தொல். சொல்.1) எனவும் வரும் வருமொழி வரையாது கூறினமையின் இம்முடிபு நாற்கணத்தொடும் சென்றதேனும், ‘நெறி’ என்றதனால் வன்கணம் வந்துழி நீடாது எனவும், நீடல் ஒருதலை அன்று எனவும், உயிர்க்கணம் வந்துழியே யகரம் தோன்றும் எனவும் கொள்க. இன்னும் அதனானே. 28 ‘கள்வனோ அல்லன் கணவன் என் காற்சிலம்பு கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே ஈதொன்று’ சிலப். 19 7,8 என இது என்றும் சுட்டுமுதல் உகர ஈற்றுப்பெயரின் இகரம் நீடலும் கொள்க. இந்நீட்சி இருமொழிப் புணர்ச்சிக்கண் வருதலின் நீட்டும்வழி நீட்டல் அன்மை உணர்க. பிறவும் அன்ன. விளக்கம் : வினா - எகரவினா - ஒன்றுமாத்திரம். சுட்டு - அ இ உ என்ற சுட்டு மூன்றும். எவ்வடை என்புழி நிலைமொழி எகரத்தை அடுத்த வகரம் புணர்ச்சியால் வந்தது என்றும், வருமொழி அடை என்பதனை அடுத்த வகரம் உடம்படுமெய் என்றும் கொள்க. பிறவும் அன்ன. அ வயினான - பொது விதியால் அவ்வயினான என்று முடிதலேயன்றிச் செய்யுட்கண் ஆவயினான எனச் சுட்டு நீண்டு முடிதலும் கொள்க. |