பக்கம் எண் :

428

அ+இருதிணை-ஆயிருதிணை; இவ்விதி அகரச் சுட்டு ஒன்றனுக்கே கொள்ளப்படும்.

ஈதொன்று என்பது இது+ஒன்று என்பன புணர்ந்த தொடர். இத்தொடர்க்கண் இது என்பது சுட்டு முதலாகிய உகர ஈற்றுப்பெயர். இது சுட்டு இடைச்சொல் அன்றிச் சுட்டுப்பெயர் ஆதலின், ‘நெறி’ என்ற மிகையால் கொள்ளப்பட்டது. நீட்டும் வழி நீட்டல் ஒரு மொழிக் கண்ணது ஆதலின், இதனை நீட்டும் வழி நீட்டலாகக் கொள்ளுதல் கூடாது என்றார்.

நச்சினார்க்கினியர் ‘ஈதென்று’ என்பது புறனடையால் முடித்துக் கொள்ளப்படும் என்பதனைச் ‘சுட்டின் இயற்கை’ தொல். 238 என்ற நூற்பா உரையில் சுட்டியுள்ளார்.

தொல்காப்பியனார் சுட்டுப் பற்றிய விதிகளை அகர இகர உகர ஈறுகளில் தனித்தனியே கூறியுள்ளார். எகர வினாயாவினாவின் திரிபு என்பது அவர் கருத்து ஆதலின் எகர வினாப்புணர்ச்சிக்கு அவர் விதி கூறினார் அல்லர்.

‘எகர வினா முச்சுட்டின்’ (நன்.163) என்ற நூற்பாவுரையில் ‘யகரமும் எய்தின் வவ்வும்’ என்றமையின் இங்ஙனம் தோன்றிய வகரயகரங்கள் உடம்படுமெய் அல்ல என்பதூஉம், யகரம் தோன்றும்’ எனவே இந்நீட்சி அடி தொடை நோக்கி நீட்டும் வழி நீட்டல் அன்று என்பதூஉம், யகரமும் என எண்ணின்கண் நின்ற இழிவு சிறப்பு உம்மையால் யகரத்தோற்றம் உயிர்வரும் வழி அன்றிப் பிறவழித் தோன்றாது என்பதூஉம் ‘நெறி’ என்றமையின் இவ்வாறு நெறிப்பட வருவன எல்லாம் கோடல் வேண்டும் என்பதூஉம் பெற்றாம்.

‘ஆவயினான’ எனச் சுட்டு நீண்டு பிறவழி யகரம் தோன்றாதாயிற்று.

‘இவ்வாறு நெறிப்பட வருமாறு: யாங்ஙனம் என வினாமுன் வருமொழி ஙகரம் மிகுந்தது. ஆங்ஙனம்