பக்கம் எண் :

429

ஈங்ஙனம் ஊங்ஙனம் எனச் சுட்டுநீண்ட வழியும் வருமொழி ஙகரம் மிகுந்தது, ஈது எனவும், ஆங்கு ஈங்கு ஊங்கு எனவும், ஆண்டு ஈண்டு எனவும் சுட்டுப்பெயர்ச் சொல் நீண்டன. ‘விண்வத்துக் கொட்கும்’ எனவும், ‘செல்வுழிச் செல்க’ எனவும், ‘சார்வுழிச் சார்ந்ததகையள்’ எனவும், மெய்ஈற்றுமுன் உயிர் வருங்கால் இங்ஙனம் உடம்படுமெய் அன்று எனக் கூறும் வகரம் தோன்றின. பிறவும் அன்ன” என்று விருத்தி கூறுவதும் காண்க.

எகர வினாமுச்சுட்டின் முன்னர் வவ்வும் அவையும் தோன்றுதல் நெறியே எனவும், தூக்கின் சுட்டு நீடலும் யகரம் தோன்றலும் நெறியே எனவும் பிரித்துக் கூட்டி முடிக்க. அங்ஙனம் முடித்து, முனிவர் கூறும் சொன்முடிபுப் பொருத்தமின்மையின் இன்மையைக் காண்க,

ஒத்த நூற்பாக்கள்:

‘சுட்டின் இறுதியும்
ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே.’           தொல். 204

‘சுட்டின் முன்னர் ஞநமத் தோன்றின்
ஒட்டிய ஒற்றுஇடை மிகுதல் வேண்டும்.’      205

‘யவமுன் வரினே வகரம் ஒற்றும்.’      206

‘உயிர்முன் வரினும் ஆயியல் திரியாது.’      201

‘நீடவருதல் செய்யுளுள் உரித்தே.’      208

‘சுட்டின் இயற்கை முற்கிளந் தற்றே.’      238

‘சுட்டின் முன்னரும் அத்தொழிற்று ஆகும்’      255

‘ஏனவை வரினே மேனிலை இயல.’      256

‘ஆவிக் குறிற்பின் ஞநமவத் தோன்றில் அவ்வொற்று இடையாம்
மேவிய பன்னொன்று தோன்றில் வவ்வாம்’           வீ. 84

‘எகர வினாமுச் சுட்டின் முன்னர்
உயிரும் யகரமும் எய்தின் வவ்வும்