430 பிறவரின் அவையும் தூக்கில் சுட்டு நீளின் யகரமும் தோன்றுதல் நெறியே’ நன். 163 ‘அகரச்சுட்டு...........இருவழியினும் மிகும்.’ மு. வீ. பு. 74 ‘அகரச் சுட்டின்முன் ஞநமத் தோன்றின் தத்தம்ஒற்று இடைமிகும் என்மனார் புலவர்.’ மு. வீ. பு. 76 ‘வயவரின் வகரம் வரும்என மொழிப.’ 77 ‘ஆவிவரினும் அவ்வியல் நிலையும்.’ 78 ‘யாப்பினுள் அஆ ஆகும் என்ப.’ 79 ஒருசார்த் தொழிற்பெயர்ப் புணர்ச்சி 81. ஞணநம லவளன ஒற்றுஇறு தொழிற்பெயர் ய-அல் மெய் மெய்வரின் உ-உறும் நவ்விற்கு அவ்வும் ஆகும் வேற்றுமைக்கு என்ப செவ்விதின் அவ்வியல் தெரியுங்காலை. இஃது ஒருசார்த் தொழிற்பெயர் வன்கணத்தொடும் மென்கணத்தொடும் இடைக்கணத்து வகரத்தொடும் புணருமாறு தொகுத்து உணர்த்துகின்றது. இ-ள்: ஞகரமும் ணகரமும் நகரமும் மகரமும் லகரமும் வகரமும் ளகரமும் னகரமும் ஆகும் எட்டு ஒற்றுக்களும் ஈறாக வரும் தொழிற்பெயர்கள் யகரம் ஒழிந்த எட்டு ஒற்றுக்களையும் முதலாக உடைய மொழிகள் வருமொழியாய் வரின் இருவழிக் கண்ணும் உகரம் பெற்று முடியும். அவற்றுள் நகர ஈற்றுத் தொழிற் பெயர்க்கு உகரமே அன்றி, அகரமும் ஆம் வேற்றுமைக் கண் என்று கூறுவர் ஆசிரியர் செவ்விதாக அவ்விலக்கணத்தை ஆராயுங்காலத்து என்றவாறு. எ-டு: உரிஞுக்கடிது மண்ணுக்கடிது பொருநுக்கடிது செம்முக்கடிது புல்லுக்கடிது தெவ்வுக்கடிது துள்ளு |