பக்கம் எண் :

431

கடிது துன்னுக்கடிது - சிறிது - தீது - பெரிது - ஞான்றது - நீண்டது - மாண்டது - வலிது - எனவும், கடுமை - சிறுமை - தீமை - பெருமை - ஞாற்சி- நீட்சி - மாட்சி - வலிமை - எனவும் வரும்.

இம் முதல் நிலைத் தொழிற் பெயர்கட்கு உரிஞுதல் மண்ணுதல் பொருநுதல் செம்முதல் புல்லுதல் செவ்வுதல் துள்ளுதல் துன்னுதல் எனப் பொருள் உரைக்க. பொருநுதல் - பொருந்துதல். ‘செவ்விதின் அப் பெயர் தெரியுங்காலை’ என்றதனால், ‘முரண்’ என்னும் தொழிற் பெயர் உகரம் பெறாது முரட்கடுமை - சேனை - தானை - பறை - எனவும், நெகிழ்ச்சி - நீட்சி மாட்சி - வலிமை எனவும் முரண் - கடிது - சிறிது - தீது - பெரிது நெகிழ்ந்தது - நீண்டது- மாண்டது - வலிது எனவும் இரு வழியும் உகரம் பெறாது ணகர ஈற்றுப் பொது விதியான் முடிதலும்.

இவ்வீற்றுத் தொழிற்பெயர் அல்லனவும் வெண்ணுக் கரை எனவும் ‘கனைகுரல் கடுப்பப் பண்ணுப் பெயர்த்து’ (மதுரை)-500 எனவும் உகரம் பெறுதலும்.

வெரிந் என்னும் சினைப்பெயரும் பொருந் என்னும் சாதிப் பெயரும் வெரிநுக்கடிது பொருநுக்கடிது என அல்வழிக்கண் உகரம் பெறுதலும், வெரிநக்கடுமை பொருநக்கடுமை என வேற்றுமைக் கண் அகரம் பெறுதலும்.

உயவல் யானை வெரிநுச்சென் றன்ன’ அகநா-65. வெரிநுக்கடுமை எனச் சிறுபான்மை உகரம் பெறுதலும்,

வெரிந் என் இறுதி கெடுதலும், கெட்ட இடத்து வெரிங் குறை வெரிக்குறை - செய்கை - தலை - புறம் - என வருமொழிக்கு இனமான மெல்லெழுத்துப் பெறுதலும் வல்லெழுத்து மிக்கு முடிதலும்,

உரிஞின்குறை - பொருநின்குறை - வெரிநின்குறை எனச் சாரியை பெறுதலும்.