பக்கம் எண் :

432

கன்னல்கடிது பின்னல்கடிது ஆடல்கடிது பாடல்கடிது நாட்டங்கடிது ஆட்டங் கடிது - சிறிது-தீது - பெரிது - ஞான்றது - நீண்டது - மாண்டது - வலிது - எனவும், கன்னற் கடுமை பின்னற் கடுமை ஆடற்கடுமை பாடற்கடுமை நாட்டக் கடுமை ஆட்டக்கடுமை - செய்கை - தலை - புறம் ஞாற்சி நீட்சி மாட்சி வலிமை எனவும் முதல் சினைத் தொழிற் பெயர் அல்லாத லகர மகர ஈற்றுத் தொழிற்பெயர்கள் உகரம் பெறாது தமக்கு ஏற்ற ஈற்றுப் பொது விதியான் முடிதலும்,

கோள்கடிது கோட்கடிது - சிறிது - தீது - பெரிது - ஞான்றது - நீண்டது - மாண்டது - வலிது எனவும்,

கோள் கடுமை கோட்கடுமை - சிறுமை - தீமை - பெருமை - ஞாற்சி - நீட்சி - மாட்சி - வலிமை எனவும். இரு வழியும் முதல்நிலைத் தொழிற்பெயர் அல்லாத ளகர ஈற்றுத் தொழிற்பெயர் உகரம் பெறாது தமக்கு ஏற்ற செய்கை பெறுதலும்,

ஒளகார ஈற்றுத் தொழிற்பெயர் கௌவுக்கடிது வௌவுக்கடிது - கடுமை என இரு வழியும் உகரம் பெறுதலும் கொள்க.

‘உயவல் யானை வெரிநுச் சென்றன்ன’ என்பதனை யானையின்முதுகின்மேல் சென்ற அன்ன என விரிக்க. 29

விளக்கம் : தொல்காப்பியம் ஈறுதோறும் முடிக்கும் விதிகளைச் சுருக்க நூலாதலின் இது ஒரே நூற்பாவில் முடிக்கிறது.

பொருந் என்பது ஒரு சாதிப்பெயரும் பொருந்துதல் என்னும் வினைப்பெயருமாம் என நச்சினார்க்கினியர் தொல்காப்பியம் 299 ஆம் நூற்பாவில் குறிப்பிடுகிறார்.

முரண் என்ற தொழிற்பெயர் உகரம் பெறாது முரட் கடுமை என்றாற்போலக் கொள்ளும் வேற்றுமை