பக்கம் எண் :

433

முடிபும், முரண்கடிது என்றார்போலக் கொள்ளும் அல்வழி முடிபும், முரண்கடுமை முரட்கடுமை என்றாற் போலக் கொள்ளும் வேற்றுமை உறழ்ச்சி முடிபும்’ முரண் என் தொழிற்பெயர் முதல்இயல் நிலையும்’ தொல். 309 என்ற நூற்பா வுரையுள் நச்சினார்க்கினியரால் கொள்ளப்பட்டவை. அவ்வீற்றுத் தொழிற் பெயர் அல்லனவும் வெண்ணுக்கரை, ‘பண்ணுப் பெயர்த்து’ என்றாற்போல உகரமும் வல்லெழுத்தும் பெறுதல் ‘தொழிற் பெயர் எல்லாம் தொழிற் பெயர் இயல’ தொல். 306 என்ற நூற்பா உரையுள் ‘எல்லாம்’ என்ற மிகையானும் ‘உயவல் யானை வெரிநுச் சென்றன்ன’ (அகம் 65) என்ற எடுத்துக்காட்டு, அதற்கு ‘யானையின் முதுகின்மேல் சென்றால் அன்ன, என்ற உரையும் தொல். 299ஆம் நூற்பாவின் ‘உகரம்கெட’ என்றமிகையானும், வெரிந் என்பது ஈறு கெடுதலும் கெட்ட விடத்து வருமொழி வல்லெழுத்தும் இனமான மெல்லெழுத்தும் மிகுதல் தொல்காப்பிய 310, 311ஆம் நூற்பா உரையானும், உரிஞின் குறை - பொருநின்குறை- வெரிநின்குறை - எனச் சாரியை பெறுதல் தொல். 299ஆம் நூற்பாவின் ‘உக்கெட’ என்ற மிகையானும், கன்னல் கடிது முதலிய லகர ஈற்று அல்வழிப் புணர்ச்சி வேறுபாடும் கன்னற் கடுமை முதலிய வேற்றுமைப்புணர்ச்சி வேறுபாடும் ஆடல் கடிது முதலிய அல்வழிப் புணர்ச்சி வேறுபாடும் ஆடற்கடுமைமுதலிய வேற்றுமைப்புணர்ச்சி வேறுபாடும் ‘தொழிற் பெயரெல்லாம் தொழிற்பெயர் இயல’ தொல். 376 என்ற நூற்பாவின் ‘எல்லாம்’ என்ற மிகையானும், நாட்டங் கடிது முதலிய மகர இறுதித் தொழிற்பெயரின் அல்வழி வேறுபாடும் நாட்டக் கடுமை முதலிய வேற்றுமைப் புணர்ச்சி வேறுபாடும் ‘தொழிற் பெயரெல்லாம் தொழிற்பெயர் இயல’ தொல். 327 என்ற நூற்பாவின் ‘எல்லாம்’ என்ற மிகையானும், கோள் கடிது கோட் கடிது முதலிய னகர ஈற்றுத் தொழிற்பெயரின் அல்வழி முடிபு வேறுபாடும் கோட்கடுமை முதலிய