434 மேற்றுமை முடிபு வேறுபாடும் ‘நெடியாதன் இறுதி இயல்பாகுநவும்’ தொல். 400 என்ற நூற்பா உரையானும், ‘தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல’ தொல். 401 என்ற நூற்பாவின் ‘எல்லாம்’ என்ற மிகையானும், கௌவுக்கடிது கௌவுக்கடுமை என ஒளகார ஈற்றுத் தொழிற்பெயர் இருவழியும் உகரம் பெறுதலும் ஏனைய வேறுபாடும் ‘ஒளகார இறுதிப் பெயர்நிலை முன்னர்’ தொல். 295 என்ற நூற்பா உரையானும் நச்சினார்க்கினியர் உணர்த்தியுள்ளவற்றை இவ்வாசிரியர் இந்நூற்பாவின்கண் ‘செவ்விதின் அவ்வியல் தெரியுங் காலை’ என்ற மிகையாற்கொண்டுள்ளமை அறிக. ஒத்த நூற்பாக்கள்: ‘ஞகாரை ஒற்றிய தொழிற்பெயர் முன்னர் அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து மிகுமே உகரம் வருதல் ஆவயி னான’ தொல். 296 ‘ஞநமவ இயையினும் உகரம் நிலையும்.’ 297 ‘நகர இறுதியும் அதனோ ரற்ற, 298 ‘வேற்றுமைக்கு உ-கெட அகரம் நிலையும்’ 259 ‘வெரிந்என் கிளவி முழுதும் கெடுவழி வரும்இடன் உடைத்தே மெல்லெழுத்து இயற்கை’ தொல். 300 ‘ஆவயின் வல்லெழுத்து மிகுதலும் உரித்தே’ 301 ண்-தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல’ 306 ‘முரண்என் தொழிற்பெயர் முதல்இயல் நிலையும்.’ தொல். 309 ம்-‘தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல’ 327 ல்-‘தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல’ 376 ன்-‘தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல’ 401 |