435 ‘உகரமொடு புணரும் புள்ளி இறுதி யகரமும் உயிரும் வருவழி இயற்கை’ 163 ஞநவென் புள்ளிக்கு இன்னே சாரியை’ 182 ‘ஞணநம லவளன ஒற்றுஇறு தொழிற்பெயர் ஏவல் வினைநனி ய-அல் மெய்வரின் உவ்வுறும் ஏவல் உறாசில சில்வழி’ நன். 207 ‘நவ்விறு தொழிற்பெயர்க்கு அவ்வுமாம் வேற்றுமை’ தன், 208 ‘ஞஃகான் இறுதித் தொழிற்பெயர் உகரம் பெறுதலும் மிகுதலும் பெற்றித்து ஆகும்.’ மு. வீ. பு. 137 ‘ஞநமவ வரினும் உகரமொடு நிலையும்’ 138 ‘உகரச் சாரியை யொடுவரும் நகாரம்.’ 139 ‘வேற்றுமைக் கண் அகரத்தொடு சிவணும்.’ 140 ‘வெரிந்ஈறு அழுந்துமெல் லினம்மிகும் என்ப.’ 141 ‘வல்லினம் மிகுதலும் மற்றதன் இயல்பே,’ 142 ‘ஞநஇறு மொழிஇன் னொடுநடை பெறுமே.’ 56 உயிரீற்றின்முன் வன்கணம் 82. இயல்பினும் விதியினும் நின்ற உயிர்முன் வல்லெழுத்து இயையின் அவ்வெழுத்து மிகுமே. இனி, உயிர் ஒற்று இறுதிகளைத் தனித்தனி எடுத்து முடிப்பார் விரிவு அஞ்சி ஒருவாற்றான் தொகுத்து உணர்த்துவனவற்றுள், இஃது உயிர்ஈற்றுச் சொல்முன் வன்கணம் புணருமாறு தொகுத்து உணர்த்துகின்றது. இ-ள்: இயற்கையானும் செயற்கையானும் நிலை பெற்ற உயிர்ஈற்றுச் சொல் முன்னர் வல்லெழுத்து முதல் மொழி வருமொழியாய் வந்துபுணரின், அவ்வருமொழி முதற்கண் நின்ற வல்லெழுத்துக்கள் மிக்கு முடியும் இரு வழியும் என்றவாறு, |