பக்கம் எண் :

436

வட்டக்கல் சதுரப்பாறை என்றாற் போல ஒற்றீறு ஒழித்து உயிர் ஈறு ஆக்கிக் கொள்வதூஉம், தாழக்கோல் தமிழ்ப் பள்ளி என்றாற் போல இடையே எய்துவித்து உயிர் ஈறு ஆக்கிக் கொள்வதூஉம் எனச் செயற்கை ஈறு இருவகைத்து. அவை அங்ஙனம் ஆக்கிக்கொள்வுழி வல்லெழுத்து மிகுமாறு ஆங்காங்கு உணர்க.

சொல் என்றது ஈண்டு அஃறிணைப்பெயரும் சிறுபான்மை அத்திணை வினையும் விரவு வினையும் இடைச் சொல்லும் உரிச்சொல்லும் எனக் கொள்க.

உயிர் ஒருமையால் குற்றுகரமும் உருபு உயிரும் ஈண்டே அடங்கும். அங்ஙனம் அடங்கும் என்பது கருத்து ஆதல் ‘வன்தொடர் அல்லன முன் மிகா அவ்வழி’ இ. வி. 100 என்றல் தொடக்கத்தனவற்றானும்,

‘மூன்றன் உருபினும் ஆறன் உருபினும்’ இ. வி. 118 என்பதனாலும் ஈண்டு எய்தியதனை விலக்குதலான் அறிக.

வரலாறு: விளக்குறிது அதக்குறிது - சிறிது தீது - பெரிது எனவும், இருவிளக் கொற்றன் - சாத்தன் - தேவன்- பூதன் - எனவும் அகர ஈற்றுப் பெயர் முன் இரு வழியும் மிக்கன. இருவிள என்பது ஓர் ஊர். இருவிளவின் கண் கொற்றன் என விரியும்.

உணக் கொண்டான். புலிபோலக் கொண்டான், கண்டெனக்கொண்டான் - ஆங்கக்கொண்டான், சாலக்கொண்டான் சென்றான் - தந்தான் - போயினான் - என அகர ஈற்று வினைச்சொல் முன்னும் இடைச்சொல் முன்னும் உரிச்சொல் முன்னும் முறையே மிக்கன.

‘புலிபோல’ என்பது ஒன்றனொடு பொருவப்படுதல் நோக்கி இடைச்சொல் எனப்பட்தேனும்போல் என்னும் இடைச்சொல் அடியாகத் தோன்றிய வினைஎச்சக் குறிப்பு ஆதலும், என என்பது இரு சொல்லையும்