பக்கம் எண் :

437

இயைவிக்கின்ற நிலைமையான் இடைச்சொல் எனப்பட்டதேனும் செய்து செய்யூ முதலியபோலச் ‘செய்தென என் ஈறு’ என வினையெச்சமாய் அவற்றொடு உடன் எண்ணப்படுதலும் பற்றி வினைஎச்சத்துள் அடக்கி முடித்தாம்.

‘ஆங்க’ என்னும் உரையசை இடைச்சொல் ஏழன் உருபின் பொருள்பட வந்தது அல்லாமை,

‘ஆங்க என்னும் உரையசைக் கிளவியும்
ஞாங்கர்க் கிளந்த வல்லெழுத்து மிகுமே.’           தொல். 204

என்பதனான் அறிக.

தாராக்கடிது மூங்காக்கடிது - சிறிது - தீது - பெரிது - எனவும், கால் - செவி - தலை - புறம் - எனவும் - ஆகார ஈற்றுப்பெயர்முன் இருவழியும் மிக்கன.

உண்ணாக் கொண்டான் - சென்றான் - தந்தான் -போயினான் - எனவும், உண்ணாக்குதிரை - செந்நாய் - தகர் - பன்றி - எனவும்,

‘உயிர் உறுப்பு உயிர்மெய் தனிநிலை எனா அக்
குறில் நெடில் அளபெடை மூவினம் எனாஅ’
எனவும்,

உசாக்கடிது உயாக்கடிது - சிறிது - சிறிது - தீது - பெரிது- எனவும் ஆகார ஈற்று வினைச்சொல் முன்னும் இடைச்சொல் முன்னும் உரிச்சொல் முன்னும் முறையேமிக்கன. உசாக்கடுமை வயாக்கடுமை - சிறுமை - தீமை - பெருமை - என இவை பெயர்த்தன்மைப் பட்டுழி வேற்றுமைக்கண் மிகுமாறும் காண்க.

இகர ஈற்றுப் பெயர்க்கு அல்வழி முடிபுமுன்னர்க் கூறிப் போந்தமையின் ஈண்டு ஏனைவற்றிற்கே இம் முடிபு கோடும். தேடிக்கொண்டான் வந்தவழிக் கொண்