பக்கம் எண் :

438

டான் எனவும், இனிக்கொண்டான் அணிக்கொண்டான் சென்றான் - தந்தான் - போயினான் எனவும், கடிக்கமலம் - சண்பகம்-தாமரை- பங்கயம் எனவும், இகரஈற்று வினைச் சொல்லும், இப்பொழுது எனவும் அணியஇடத்து எனவும் முறையே காலமும் இடமும் உணர்த்தும் இடைச்சொற்களும் உரிச்சொல்லும் முறையே மிக்கன.

கிளிக்கால் - சிறகு - தலை - புறம் - என இகர ஈற்றுப் பெயர் முன் வேற்றுமைக்கண் மிக்கன.

கிளிகுறுமை கிளிக்குறுமை எனக் குணம்பற்றி வந்த உறழ்ச்சி முடிபும், பனியத்துக் கொண்டான் பனியிற் கொண்டான் எனப் பனி என்னும் காலப்பெயர் அத்தும் இன்னும் பெறுதலும் புறனடையாற் கொள்க.

ஈக்கடிது - சிறிது - தீது-பெரிது-எனவும், கால் - சிறகு தலை புறம் எனவும், ஈகார ஈற்றுப்பெயர் முன் இருவழியும் மிக்கன.

தழீஇக்கொண்டான் நீறீஇக்கொண்டான் என்றாற் போல்வன இகர ஈறு என்க.

கடுக்குறிது - சிறிது - தீது - பெரிது - எனவும் காய் - செதிள் - தோல் - பூ - எனவும் உகர ஈற்றுப் பெயர் முன் இருவழியும் மிக்கன.

கொண்மூக்கடிது - சிறிது - தீது - பெரிது - எனவும், குழாம் - செலவு - தோற்றம் - பறைவு - எனவும் ஊகார ஈற்றுப்பெயர் முன் இருவழியும் மிக்கன.

உண்ணூக் கொண்டான் - சென்றான் - தந்தான் - போயினான் - என ஊகார ஈற்றுவினைச் சொல்முன் மிக்கன.

ஏக்கடிது - சிறிது - தீது - பெரிது - எனவும், ஏஎக்கடுமை சிறுமை - தீமை - பெருமை - எனவும் ஏகார ஈற்றுப்பெயர்