439 இருவழியும் மிக்கன. வேற்றுமைக்கண் எகரப்பேறு புறனடையாற் கொள்க. ஐகார ஈற்றுப்பெயர்க்கு அல்வழி முடிபு மேல் கூறிப் போந்தமையின், ஈண்டு ஏனையவற்றிற்கே இம்முடிபு கோடும். ஒல்லைக் கொண்டான் வல்லைக்கொண்டான் வந்தக்கடைக்கொண்டான் கூறாமைக்குறித்தான் வந்த பின்னைக்கொண்டான் வருமுன்னைக்கொண்டான் - சென்றான் - தந்தான் - போயினான் - எனவும், மற்றைத் தெரு எனவும், பணைத்தோள் எனவும், ஐகார ஈற்று வினைச்சொல் முன்னும் இடைச்சொல் முன்னும் உரிச்சொல் முன்னும் முறையே மிக்கன். யானைக்கோடு - செவி - தலை - புறம் - என ஐகார ஈற்றுப் பெயர் முன் வேற்றுமைக்கண் மிக்கன. உழைங்கோடு, என மெல்லெழுத்துப் பெறுதலும், கலைங்கோடு கலைக்கோடு என உறழ்தலும் புறனடையால் கொள்க. ஓக்கடிது கோக்கடிது - சோக்கடிது - சிறிது - தீது - பெரிது: எனவும், ஓஒக்கடுமை கோஒக்கடுமை சோஒக்கடுமை- சிறுமை - தீமை - பெருமை - எனவும் ஓகார ஈற்றுப் பெயர் இருவழியும் மிக்கன. வேற்றுமைக்கண் ஒகரப் பேறு புறனடையால் கொள்க. கொக்குக்கடிது - சிறது - தீது - பெரிது - எனவும் - கால் - சிறகு - தலை - புறம் - எனவும் குற்றுகர ஈற்றுப்பெயர் முன் இருவழியும் மிக்கன. அடித்துக் கொண்டான் சென்ற இடத்துக் கொண்டான் - சென்றான் - தந்தான் - போயினான் - எனக் குற்றுகர ஈற்று வினைச்சொல் முன் மிக்கன. புணர்தரு செல்வம் தருபாக்குச் சென்றார் (கார் - 11) என்பதும் அது. |