பக்கம் எண் :

440

மற்றுக்கொள்-செல்-தா-போ-எனவும் அதிர்ப்புக் கடிது - சிறிது - தீது - பெரிது - எனவும் குற்றுகர ஈற்று இடைச்சொல் முன்னும் உரிச்சொல் முன்னும் முறையே மிக்கன.

அதிர்ப்புத்தன்மை எனப் பெயர்த்தன்மைப்பட்டுழி வேற்றுமைக்கண் மிகுமாறும் காண்க.

யானையைக் கொணர்ந்தான் - சேர்த்தான் - தடுத்தான் - பிடித்தான் - எனவும், ஊர்க்குக்கொண்டான் - சென்றான் தந்தான் - போயினான் - எனவும் உயிர்ஈற்று உருபின் முன் மிக்கன.

ஈண்டுக் காட்டாது ஒழிந்தனவும் வந்தவழிக்கண்டு இதுவே நிலனாக முடித்துக்கொள்க. 30

விளக்கம் : இயற்கை உயிர் ஈறு -விள பலா போல்வன
செயற்கை உயிர் ஈறு இரு வகைத்து:

ஒன்று நிலைமொழி ஈற்றுமெய் கெட, ஈற்றயல் எழுத்தே விதி உயிர் ஈறாய் அமைவது - வட்டம், சதுரம் என்பன புணர்ச்சிக்கண் ஈறு கெட, வட்ட சதுர என நிற்பது விதி உயிர்ஈறு; ஒற்று ஈற்றுச் சொற்கள் வருமொழியொடு புணரும்வழி இடையே அகரம் முதலிய சாரியை பெற்று விதி உயிர் ஈறாய் வரும் நிலை இரண்டாவது.

தாழ்+கோல் - தாழக்கோல் - இ. வி. 134

தமிழ்+பள்ளி - தமிழ்ப் பள்ளி- இ. வி. 134

இவை அகரச் சாரியை இடையே வரத், தாழ தமிழ என விதி உயிர் ஈறு ஆயினவாறு காண்க,

ஆசிரியர் உயர்திணைப் பெயரையும் விரவுப் பெயரையும் முன்னர்ப் ‘பொதுப் பெயர் உயர்திணைப் பெயர்’ (71) என்ற நூற்பாவில் ஓதியமையின் ஈண்டுக் கூறப்படுவன ஏனையவே.