பக்கம் எண் :

441

குற்றியலுகரம் உயிரது குறுக்கம் ஆதவின் இதனையும் ஈண்டே அடக்கினார். உருபு இடைச்சொல்லாமேனும் உருபு புணருமாறு வேற்றுமை புணர்ச்சியுள் அடங்கலின் அதனைத் தனியே பிரித்து இதன்கண் கொள்ளுமாறு விடுத்தார். குற்றியலுகரமும் உயிர்ஈற்று உருபும் இந்நூற்பாவினுள் அடங்குதலான் அன்றே அவற்றுள் சில மிகா என்று இவ்வியலில் விதந்து ஓதுவார் ஆயினார்.

எடுத்துக்காட்டுக்கள் பல நன்னூல் 164ஆம் நூற்பா உரையுள் மயிலைநாதர் காட்டியன.

உண-அகர ஈற்றுச் செய என்றும் வாய்பாட்டுத் தெரிநிலை வினையெச்சம்

புலிபோல - அகர ஈற்றுக் குறிப்பு வினையெச்சம்.

கண்டென. அகர ஈற்றுச் செய்தென என்ற வாய்ப் பாட்டுத் தெரிநினை வினையெச்சம்.

ஆங்க- அகர ஈற்று இடைச்சொல்.

சால - அகர ஈற்று உரிச்சொல்.

உண்ணாக் கொண்டான் - ஆகார ஈற்றுச் செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.

உண்ணாக் குதிரை - ஆகார ஈற்றுச்செய்யா என்னும் வாய் பாட்டுப் பெயரெச்சம்; இதனை அகர ஈறாகிய ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் என்பார் இக்காலத்தார். செய்யாத என்ற அகரஈற்று எதிர்மறைப் பெயரெச்சம் தொல்காப்பியத்துள் யாண்டும் காணப் பெறாமையானும், சங்கச் செய்யுளுள்ளும்,

‘எய்யா நல்லிசை’ (முருகு)

‘சுரும்பு மூசாச் சுடர்ப்பூங் காந்தள்’ (முருகு)

‘மெய்யில் தீரா மேவரு காமம்’ (அகநா)

முதலாகவும், தொல்காப்பியத்துள்