பக்கம் எண் :

50

இனி, சிறப்புப்பாயிரத்து இலக்கணம் செப்புமாறு.

‘பாயிரத்து இலக்கணம் பகருங் காலை
நூல்நுதல் பொருளைத் தன்னகத்து அடக்கி
ஆசிரிய மானும் வெண்பா வானும்
மருவிய வகையான் நுவறல் வேண்டும்’.

இதனால் அறிக.

இக்கருத்தினையே உரையாசிரியரை உள்ளிட்டோர் அனைவரும் சுட்டி உள்ளனர். எனவே, சிறப்புப்பாயிரம் யாத்தற்குரிய பாக்கள் ஆசிரியமும் வெண்பாவுமே என்பது.

நூல் செய்தான் பாயிரம் செய்யின் தன்னைப் புகழ்ந்தானாம்,

‘தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும்
தான்தற் புகழ்தல் தகுதி யன்றே’.           நன்-52

என்ப ஆகலின்,

மற்றவர்க்குப் புலப்படாத பல செய்திகளையும் விளக்கித் தன் நூலைப் பல துறைகள் கொண் பெரு நூலாக விரித்துச் செய்த ஆற்றலன் ஆயினும் தன்னைத் தானே புகழ்ந்து பாராட்டிக்கொள்ளுதல் தகுதியன்று என்பது.

இக்கருத்தினை உரையாசிரியரை உள்ளிட்டபலரும் குறிப்பிட்டுள்ளனர். இனி, மாறன் அலங்கார ஆசிரியர்

‘கலைகள் யாவையும் கற்றுஉரை தெளிந்து
துலைநாச் சமனில் துணிநிலை புரியும்
வாய்மையும் பிறர்க்குஅவை மயர்வுஅற அளிக்கும்
தூய்மையும் சான்ற துணைஇலன் எனினும்
தூய்மையும் சான்ற துணைஇலன் எனினும்