51 ஒல்காப் பதினெண் உறுப்புடை நாற்பொருள் பல்காப் பியம்பழிப்பு அறநவம் புணர்க்கவும் முத்தமிழ்க் கல்வியும் உத்தம வாக்கின் வித்தகக் கவிதையும் வேண்டினன் ஆகிலும் தற்புகழ் தலும்பிறன் தன்னை இகழ்தலும் பொற்புஅல ஆகும் புலனுடை யோற்கே’. மா-62 என்று கூறியதனையும், அதன் உரையாசிரியர், இலக்கண இலக்கியங்களை முற்றப்பாடம் போற்றி உரையைச் சந்தயம் அறத்தெளிந்து நுலைநாப் போன்றும் துலாக்கோற்சமன் போன்றும் ஐயமுற்ற பொருளை ஐயம்அறக் கேட்டோர்க்கு உணர்த்தும் ஒப்பிலாதானாம் எனினும், எழுத்து ஆகிய ஐந்து இலக்கணங்களையும் பதினெட்டு உறுப்பொடு நாற்பொருள் பயப்பன ஆகிய பெருங்காப்பியங்களையும் குற்றமறப் புதியனவாய்ப் பாடல் சான்றவனாம் எனினும், தன்னைப் புகழ்தலும் பிறன் ஒருவனை இகழ்தலும் உணர்வு உடையோற்கு அழகுஅல்ல என்றவாறு. இன்னும் ‘தோன்றா தோற்றித் துறைபல முடிப்பினும் தான்தாற் புகழ்தல் தகுதி யன்றே’. என்பதனாலும் கொள்க எனக் கூறியவற்றையும் நோக்குக. ‘தன் ஆசிரியன் தன்னொடு கற்றோன் தன்மா ணாக்கன் தகும்உரை யாளன்என்று இன்னோர் பாயிரம் இயம்புதல் கடனே’ நன்-51 என்றும், இதனையே உரையாசிரியர் நச்சினார்க்கினியர் நன்னூலார் முதலியோரும் குறிப்பிட்டனர். எனவே |