பக்கம் எண் :

539

நான்காவது-மெய்யீற்றுப் புணரியல்

ணகர னகர ஈற்றின்முன் நாற்கணம்

119. ணனவல் லினம்வரட் டறவும் பிறவரின்
இயல்பும் ஆகும் வேற்றுமைக்கு அல்வழிக்கு
அனைத்துமெய் வரினும் இயல்பா கும்மே.

என்பது சூத்திரம். இவ்வோத்து மெய்யீற்றுப்பதம் நின்ற வருமொழி வன்கணத்தொடும் சிறுபான்மை ஏனைக் கணங்களொடும் புணருமாறு ஒருவாற்றான் தொகுத்து உணர்த்தினமையின், மெய்யீற்றுப் புணரியல் என்னும் பெயர்த்து.

மேல் உயிர் ஈற்றுப்பதம் புணருமாறு உணர்த்தி இதனுள் மெய்யீற்றுப்பதம் புணருமாறு உணர்த்தினமையின் மேல் ஓத்தினொடு இயைபு உடைத்தாயிற்று. இதனுள் இத்தலைச் சூத்திரம் ணகர னகரஈறு புணருமாறு கூறுகின்றது.

இ-ள்: ணகர னகர ஈறுகள் வல்லெழுத்து வந்தால் முறையே ணகரம் டகரமாகவும் னகரம் றகரமாகவும் திரிந்தும், மென்கணமும் இடைக்கணமும் வந்தால் இயல்பாயும் முடியும், வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண்; அல்வழிப் புணர்ச்சிக்கண் முக்கணமும் வந்தாலும் இயல்பாய் முடியும் என்றவாறு.

வரலாறு : மட்குடம் - பொற்குடம்-சாடி - தூதை - பானை-எனவும், ஞாற்சி-நீட்சி-மாட்சி-யாப்பு-வலிமை-எனவும், மண்கடிது பொன்கடிது - சிறிது - தீது - பெரிது - ஞான்றது-நீண்டது-மாண்டது-யாது - வலிது - எனவும் முறையே காண்க.

விளக்கம்

தொகுத்துக் கூறப்படும் மெய்ஈறுகளை உயிர்ஈற்றுப் புணரியலின் தொடக்கத்தே கூறி, ஈண்டுச் சிறப்பான