பக்கம் எண் :

540

ஈறுகளையே கூறுகிறார். ஒப்பின் முடிந்தலான் நெடுங் கணக்குமுறை அன்றி னகர ஈறு உடன் கூறப்பட்டது.

நெடுங்கணக்கினுள் கூறப்பட்ட மெய்யீறுகளும்ஞகர நகரங்கள் உயிரீற்றுப்புணரியலில் கூறப்பட்ட பொதுப் புணர்ச்சி (69, 81) ஒன்றே பெறுதலின் அவற்றை விடுத்து ஏனைய மெய்யீறுகளின் சிறப்புப் புணர்ச்சிகளைக் கூறத் தொடங்கியுள்ளார்.

இவ்வீறுகள் வேற்றுமைக்கண் வருமொழியில் வன்கணம் வருவழிமாத்திரம் தத்தம் இன வல்லெழுத்தாகத் திரிந்தும், வேற்றுமைக்கண் ஏனைக்கணங்கள் வரினும் அல்வழிக்கண் நாற்கணங்களும் வரினும் திரியாதும் புணரும் என்பது இந்நூற்பாவால் பெற்றாம்.

ஒத்த நூற்பாக்கள்:

‘ணகார இறுதி வல்லெழுத்து இயையின்
டகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கே.’           தொல். 202

‘னகார இறுதி வல்லெழுத்து இயையின்
றகாரம் ஆகும் வேற்றுமைப் பொருட்கே.’      332

‘மொழிமுதல் ஆகும் எல்லா எழுத்தும்
வருவழி நின்ற ஆயிரு புள்ளியும்
வேற்றுமை அல்வழித் திரிபுஇடன் இலவே.’      147

‘வேற்றுமைக் கண்ணும் வல்லெழுத்து அல்வழி
மேற்கூறு இயற்கை ஆவயி னான.’      148

முழுதும்           நன். 209

‘ணனமுன் தகரம் டறவாம் முறையே
ணன இல்வழிக்கு என்றும் இயல்பாய்
வேற்றுமைப் பொருட்கு அவை வலிவரின் டறவாம்.’           தொ.வி. 24

‘ணகரமெய் டகரஒற் றாகத் திரியும்.’           மு.வீ. பு. 143