541 ‘னகரம்வேற் றுமைக்கண் டகரம் ஆகும்.’ 163 ‘வல்லெழுத்து அல்வழி இயல்பாம் வேற்றுமை’ 30 ‘அல்வழி இவ்விரு மையும்முத லாகுஎழுத்து எல்லாம் முன்வரின் இயல்பா கும்மே.’ மு.வீ.பு. 29 குறில் அணையா ணகர னகரங்கள் 120. குறில் அணைவு இல்லா ணனக்கன் வந்த நகரம் திரிந்துழி நண்ணும் கேடே. இஃது அவற்றுள் ஒரு சாரனவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது. இ-ள்: குற்றெழுத்தினைச் சாராது ஒருமொழி தொடர்மொழிகளைச் சார்ந்த ணகர னகர ஈறுகள் வருமொழி முதற்கண் நின்ற நகரம் திரிந்த இடத்துப் பொருந்தும் கெடுதலை என்றவாறு. வரலாறு : பாண் பரன் பைம்பூண் மணிப்பூண் பைங்கண் பசுங்கண் நன்று எனவும் நன்மை எனவும், வான் வயான் வலியன் அலவன் கலுழன் செய்பொன் பசும்பொன் நன்று எனவும் தன்மை எனவும் வரும். தான்நீண்டான் யான்நீண்டனன் என்றால் போல்வன ‘பொதுப்பெயர் உயர்திணை’ (71) என்னும் சூத்திரத்து முறையல கூற்றானேமுடியும். 2 விளக்கம் எய்தியது-119ஆம் நூற்பாச் செய்தி பிறிதுவிதி-டகர றகரங்களாகத் திரிந்தும் திரியாதும் பொதுவிதியால் (119) புணர்ந்த ணகர னகரங்கள் கெடும் என்பது. |