பக்கம் எண் :

542

ஒருமொழி - ணகரனகரங்களுக்குமுன் ஒரேநெட்டெழுத்தைப்பெற்று மொழியாகும் பாண் போல்வன. தொடர்மொழி-ணகரனகர ஈறுகளோடு இரண்டற்கு மேற்பட்ட எழுத்துக்களால் ஆகிய பரண் வயான் முதலியன.

பாண்+நன்மை-ணளமுன் டணவும்’ (இ. வி. 70) என்ற நூற்பாவால் நன்மை ணன்மை என்று ஆகியவழி, இந்நூற்பா விதிப்படி பாண் என்பதன் ணகரம் கெடப் பா+ணன்மை-பாணன்மை என முடிக்க, பிறவும் அன்ன.

இவ்வாறே னகரஈற்றுள் வான் + நன்மை - ‘ணளமுன்டணவும் னலமுன்றனவும், (இ. வி. 70) என்ற நூற்பாவால் நன்மை னன்மை என்றாகிய வழி, இந் நூற்பாவால் வான் என்பதன் னகரம் கெட வா +னன்மை-வானன்மை என முடிக்க, பிறவும் அன்ன.

விதிகள்யாவும் அஃறிணைக்கே கூறப்படுவன, உயர்திணையையும் விரவுத் திணையையும் இலக்கண ஆசிரியர்கள் விதந்தே கூறுவர் என்பது உணரத்தக்கது. ‘ஆசிரியர் உயர்திணைப்பெயரும் விரவுப்பெயரும் எடுத்து ஓதியே முடிப்பார்’ (தொல். 153 நச் - உரை)

ஒத்த நூற்பாக்கள்:

நெடியதன் முன்னர் ஒற்றுமெய் கெடுதல்
அறியத் தோன்றிய நெறிஇயல் என்ப.’           தொல். 160

‘குறுமையும் நெடுமையும் அளவிற் கோடலின்
தொடர்மொழி எல்லாம் நெட்டெழுத்து இயல.’      50

முழுதும்           நன். 210

‘ணனமுன் குறில்வழி நகரம் ணனவாம்
மற்றது ணனமுன் மாய்ந்து கெடுமே.’           தொ.வி. 24