543 சில ணகர ஈற்றுச் சிறப்புவிதி 121 சாதி குழூஉபரண் கவண்பெயர் இறுதி இயல்பாம் வேற்றுமைக்கு உணவுஎண் சாண்பிற டஆ கலும்ஆம் அல்வழி யும்மே. இது ணகர ஈற்றுள் சிலவற்றிற்கு எய்தியது விலக்கிப் பிறிதுவிதி வகுக்கின்றது. இ-ள்: சாதிபற்றியும் திரள்பற்றியும் வரும் பெயர்களும், பரண், கவண் என்னும் தனிப்பெயர்களும் ஆகிய இவற்றின் இறுதி ணகரம் வன்கணம்வரின் திரியாது வேற்றுமைக் கண்ணும் இயல்பாய் முடியும். வரையறைப் பொருண்மை உணர்த்தாது ஓர் உணவை உணர்த்தி நிற்கும் எண் என்னும் பெயரும் சாண் என்னும் அளவுப் பெயரும் வன்கணம் வரின் இயல்பு ஆகாது டகரமாய்த் திரிந்து முடிதலும் பெறும் அல்வழிக்கண் என்றவாறு. வரலாறு: பாண்குடி உமண்குடி-சேரி-தோட்டம்-பாடி எனவும், அமண்குடி-சேரி-தோட்டம்-பாடி-எனவும் பரண்கால் கவண்கால் எனவும் எட்கடிது-சிறிது-தீது-பெரிது-எனவும் சாட்கோல் எனவும் முறையே காண்க, உம்மையான் எண்கடிது சாண்கோல் என இயல்பு ஆதலே வலியுடைத்து என்க. ‘பிற’ என்ற மிகையானே, கண்கடுமை, அட்டூண்டுழனி என்றல் தொடக்கத்து இயல்பும் முரண்கடுமை முரட்கடுமை என்றல் தொடக்கத்து உறழ்வும், மண்ணங்கட்டி எனவும் ‘ஆண் மரக்கிளவி’ (தொல். 304) ஆணங்கோடு-செதில்-தோல்பூ- இலை எனவும் திரியாது அம்முப் பெறுதலும், ‘விண்ணென |