பக்கம் எண் :

544

வரூஉம் காயப்பெயர் (தொல். 305) செய்யுளிடத்துத் தொழிற்சொல் வருங்காலத்து,

‘விண்வத்துக் கொட்கும் வண்ணத்து அமரர்’

எனத்திரியாது அத்துப்பெறுதலும்

‘விண்குத்து நீள்வரை வெற்ப களைபவோ’           (நாலடி 226)

எனப்பெறாதும் வருதலும்,

வெண்ணுக்கரை,

‘கனைகுரல் கடுப்பப் பண்ணுப் பெயர்த்து’           மதுரைக் 560

எண்ணுப்பேறு என உகரம் பெறுதலும், இன்னோரன்ன பிறவும் கொள்க.

ஆண்கை- பெண்கை-செவி-தலை-புறம் எனவும் கடிது-சிறிது-தீது-பெரிது எனவும் இருவழியும் இயல்பு ஆதல் பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்கள் ஈற்றுமெய் வலிவரின் இயல்பாம்’ (இ.வி.71) என்பதனானும்

மண்கை புண்கை என்றாற் போல்வன இரண்டாம் வேற்றுமைத் திரிபானும் (இ .வி.75) முடியும்.

விளக்கம்

எய்தியது-119ஆம் நூற்பாச்செய்தி

பிறிது விதி - வேற்றுமைக்கண் டகாரம் ஆகாது, ணகார ஈற்றுச் சாதிப்பெயர்களும் குழூஉப் பெயர்களும்- கவண் பரண் என்ற பெயர்களும் இயல்பாம் என்பதும், அல்வழிக்கண் இயல்பாகாது உணவுஎண், சாண் என்பன உறழும் என்பதும்.

சாதி-பாண் முதலியன, குழூஉ-சமயம்பற்றி ஒரே கூட்டமாகிய பல சாதிகளை உட்கொண்ட அமண் முதலியன. வரையறைப் பொருண்மைக்கண் எண்ணிக்கையைக் காட்டும் எண் என்பதனை விடுத்து, எள் என்பதன்