545 திரிசொல்லாய்ச் செய்யுட்கே வரும் எண் என்பதனை உணவு என்ற அடைமொழி பிறிதின் இயைபு நீக்கிய விசேடணமாய் அடுத்தது. சாட்கோல்-சாணாகியகோல் என இரு பெயரொட்டுப் பண்புத்தொகை, இருபெயரொட்டுப் பண்புத்தொகைகள் பெரும்பான்மையும் வேற்றுமை முடிபின ஆதல், ‘வேற்றுமை அல்வழி இஐ என்னும்’ (இ. வி. 77) என்ற நூற்பா உரை விளக்கத்தானும் அறிக. ‘டவ்வாகலும் ஆம்’ என்ற எதிர்மறை உம்மையானே, டகரம் ஆகாது எண்கடிது சாண்கோல் என முடிதலே வலியுடைத்து என்றார். ‘பிற’ என்ற மிகையால் இவ்வாசிரியர் கொள்வனவற்றுள் கண்கடுமை, அட்டூண்டுழனி என்றல் தொடக்கத்து இயல்பு மயிலைநாதரால் (நன். 210) குறிப்பிடப்பட்டுள்ளன. ‘முரண்என் தொழிற்பெயர் முதல்இயல் நிலையும்’ தொல். 309 என்ற நூற்பாவில் மிகையான் முரண்கடுமை முரட்கடுமை என்னும் உறழ்வும், ‘உணரக் கூறிய புணரியல் மருங்கின் கண்டுசெயற்கு உரியவை கண்ணினர் கொளலே’ தொல். 405 என்று நூற்பா உரையுள் மண்+ கட்டி-மண்ணங்கட்டி என அம்முப்பெறுதலும், ‘ஆண்மரக் கிளவி அரைமர இயற்றே’ தொல், 304 என்ற நூற்பாவான் ஆணங்கோடு முதலியவை வன்கணம்வரின் அம்முப்பெறுதலும், அந்நூற்பாவின்கண் ‘ஒன்றென |