546 முடித்தலான் ஆண்+இலை-ஆண்+அம்+இலை-ஆண இலை என இயல்பு கணத்தும் அம்முப்பெறுதலும், அம்மின் மகரம் உயிர்க்கணம் வருவழியும் கெடுதல் ‘மென்மையும் இடைமையும் வரூஉங் காலை இன்மை வேண்டும் என்மனார் புலவர்’ தொல். 130 என்னும் நூற்பாவில் உரையிற்கோடலாற் பெறுதலும், ‘விண் என வரூஉம் காயப் பெயர்வயின் உண்மையும் உரித்தே அத்துஎன் சாரியை செய்யுள் மருங்கின் தொழில்வருகாலை’ தொல். 305 என்ற நூற்பாவான் விண் என்ற குறிப்பினை உணர்த்தாது ஆகாயத்தை உணர்த்தும் விண் என்ற பொருட்பெயர் செய்யுளிடத்துத் தொழிற்சொல்லொடு புணருங்காலத்து இடையே அத்துச் சாரியை பெறுதலும். ‘அத்தே வற்றே ஆயிரு மொழிமேல் ஒற்றுமெய் கெடுதல் தெற்றன் றற்றே’ தொல். 133 என்ற நூற்பாவில் வற்றினை முற்கூறாத முறையன்றிக் கூற்றினான் புள்ளியீற்றின் முன்னர் அத்தின்மிசை ஒற்றுக் கெடாது, உடம்படு மெய்வர ‘விண்வத்துக் கொட்கும்’ எனப் புணர்ச்சி முடிபு பெறுதலும் கொள்க. ‘விண்குத்து நீள்வரை வெற்ப களையவோ’ (நாலடி. 226) என்ற எடுத்துக்காட்டை விண் என்ற ஆகாயப்பெயர் சாரியை இன்றி வருதலைக்காட்ட நச்சினார்க்கினியரும் (305) உரையாசிரியரும் (306) குறிப்பிட்டுள்ளனர். வெண்ணுக்கரை, ‘கனைகுரல் கடுப்பப் பண்ணூப் பெயர்த்து’ (மதுரைக்காஞ்சி. 560) எண்ணூப்பேறு எனத் தொழிற்பெயர் அல்லனவும் உகரமும் வல்லெழுத்தும் பெற்றுப் புணர்தலைத் ‘தொழிற் பெயர் எல்லாம்’ (தொல். 376) என்னும் நூற்பாவின் ‘எல்லாம்’ என்ற மிகையால் நச்சினார்க்கினியர் கொண்டுள்ளார். |