பக்கம் எண் :

547

‘ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை’ (தொல். 303) என்ற நூற்பா உரையுள் நச்சினார்க்கினியர் இவை விரவுப்பெயர் என்று குறிப்பிட்டுள்ளார்.

‘பெண்ணும் ஆணும் பிள்ளையும் அவையே’ (தொல். பொ. 624) என்ற நூற்பா வுரையுள் தனித்துக் கூறப்பெறின் பெண் ஆண் பிள்ளை என்பன உயர்திணையே சுட்டும் என்றார் பேராசிரியர். இவை விரவுப் பெயராயினும் உயர்திணைப் பெயராயினும் ‘பொதுப்பெயர் உயர்திணைப் பெயர்கள்’ (இ.வி.71) என்பதனால் புணர்ச்சிவிதி கொள்ளப்படும் என்று இவ்வாசிரியர் ஆண் பெண் என்ற சொற்கள் முன் வலிவரின் இருவழியும் இயல்பாதலைச் சுட்டுகிறார்.

‘ணகார இறுதி வல்லெழுத் தியையில்’ (தொல். 302) என்ற நூற்பா உரையில், மண்கை புண்கை என்பன இரண்டாம் வேற்றுமைப் பொருளாதலின் பொதுவிதியான் ஈறு திரியாது முடிந்தன என்பதை நச்சினார்க்கினியர் குறிப்பிட்டுள்ளார்.

ஒத்த நூற்பாக்கள் :

‘ஆணும் பெண்ணும் அஃறிணை இயற்கை.’           தொல். 303

‘ஆண்மரக் கிளவி அரைமர இயற்றே.’     304

‘விண்என வரூஉம் காயப் பெயர்வரின்
உண்மையும் உரித்தே அத்துஎன் சாரியை
செய்யுள் மருங்கின் தொழில்வரு காலை.’     305

‘தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல,’      306

‘கிளைப்பெயர் எல்லாம் கௌத்திரி பிலனே.’      307

‘வேற்றுமை அல்வழி எண்என் உணவுப்பெயர்
வேற்றுமை இயற்கை நிலையலும் உரித்தே.’     308

‘முரண்என் தொழிற்பெயர் முதல்இயல் நிலையும்.’     309

ஆணும்பெண்ணும் மிகாது இயல்பு ஆகும்.’           மு.வீ.பு.144