பக்கம் எண் :

548

‘ஆண்மர மாயின் அம்மொடு சிவணும்.’      145

‘தொழிற்பெயர் எல்லாம் தொழிற்பெயர் இயல,’      148

‘இயல்பாம் கிளைப்பெயர் எல்லாம் என்ப.’      149

‘அல்வழி உணவுஎண் டகாரம் ஆகும்,’      150

‘இயல்பா தலும்திரி தலும்முரண் இயல்பே.’      146

னகரஈற்றுச் சிறப்புவிதி-122-128
வேற்றுமையில் னகர ஈற்றுக் கிளைப்பெயர்

122. னஃகான் கிளைப்பெயர் இயல்பும் அஃகான்
அடைவும் ஆகும் வேற்றுமைப் பொருட்கே,

இது னகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கலும் எய்தாதது எய்துவித்தலும் நுதலிற்று.

இ-ள்: னகர ஈற்றுச் சாதிப்பெயர் திரியாது இயல்பு ஆதலும் அகரம் பெறுதலும் ஆகிய இரு திறனும் பொருந்தும், வேற்றுமைப் பொருட் புணர்ச்சிக்கண் என்றவாறு.

வரலாறு: எயின்குடி-சேரி-தோட்டம்-பாடி எனவும். எயினக்கன்னி-சிறுவன்-தலைவன்-பிள்ளை-ஞாற்சி-நீட்சி-யாப்பு-வலிமை-ஆட்சி எனவும் முறையே காண்க.

சாதிப்பெயரும் குழூஉப் பெயரும் உயர்திணைப்பெயர் ஆகாது அஃறிணைப் பெயராய் நிற்றலின் ஈண்டு முடித்தார். 4

விளக்கம்

எய்தியது விலக்கல்-119ஆம் நூற்பாவினால் எய்திய நிலைமொழி ஈற்றுத்திரிபினை விலக்குதல்,

எய்தாதது எய்துவித்தல் - அகரச்சாரியை பெறும் என்பது.