பக்கம் எண் :

549

குடிமை ஆண்மை இளமை மூப்பு என்பன பேதல எயின் முதலிய சொற்கள் ‘உயர்திணை மருங்கின் நிலையின ஆயினும்’ அஃறிணை முடிபே கொள்ளும் என்றார்.

‘எயினக்கன்னி எயினப்பின்ளை எயின மன்னன் என அல்வழிக்கண் அகரச்சாரியை பெறுதலும் கொள்க’ என்பது நன்னூல் விருத்தியுரை. நன், 212.

எயினக்கன்னி முதலியவற்றை நச்சினார்க்கினியர் ‘கிளைப்பெயர் எல்லாம் கிளைப்பெயர் இயல் (தொல். 338) என்ற நூற்பாவின் எல்லாம்’ என்ற மிகையாற் கொண்டார்; எயின் வந்தது என அச்சொல் அஃறிணைக் கண்ணும் வரும் என்பதனையும் குறித்துள்ளார்.

‘கிளை என்னும் பலபொருள் ஒருசொல் ஈண்டுச் சாதி மேல் நின்றது.’ நன். 212-விருத்தி

ஒத்த நூற்பாக்கள்:

‘கிளைப்பெயர் எல்லாம் கிளைப்பெயர் இயல.’           தொல். 338

முழுதும்:-           நன். 212

‘கிளைப்பெயர் எல்லாம் மிகாதுஇயல்பு ஆகும்’           மு. வீ. பு. 169

வேற்றுமையில் ‘மீன்’ புணர்ச்சி

123. மீன்றவ் வொடு பொரூஉம் வேற்றுமை வழியே.

இது னகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுக்கின்றது.

இ-ள்: மீன் என்னும் சொல் இறுதி னகரம் றகர ஒற்றொடு உறழ்ந்து முடியும், வேற்றுமைக்கண் வல்லெழுத்துவரின் என்றவாறு.