பக்கம் எண் :

550

எ-டு: மீன்கண் மீற்கண்-செவி-தலை-புறம்-எனவரும். 5

விளக்கம்

எய்தியது-னகரம் வேற்றுமைக்கண் றகரம் ஆதல்.

பிறிதுவிதி-இயல்பும் வல்லெழுத்தாதலும் ஆகிய உறழ்ச்சி.

“றகரமாதல் இக்காலத்துப் பயின்று வாராதேனும், தொன்னெறி ஆதலின் ஆணைவழி நிற்க என்பார் ‘வழியே’ என்றால்.” (நன். 213 விருத்தி)

ஒத்த நூற்பாக்கள்:

‘மீன் என்கிளவி வல்லெழுத்து உறழ்வே.’           தொல். 339

முழுதும்           நன். 213

‘மீன்வல் லெழுத்துறழ் வும்பெறும் என்ப.’           மு.வீ.பு. 170

‘தேன்’ முன் நாற்கணம்

124 தேன்என் கிளவி வல்லெழுத்து இயைபின்
மேல்நிலை ஒத்தலும் ஈறுபோய் வலிமெலி
மிகுதலும் மெலிவரின் இறுதியொடு உறழ்தலும்
இடைவரின் இயல்பும் ஆம்பிற உயிர்வரின்
ஒற்றுமிகு தகரமொடு நிற்றலும் உரித்தே.

இது னகர ஈற்றுள் ஒன்றற்கு எய்தியது விலக்கிப் பிறிது விதி வகுத்தலும் எய்தியது இகந்துபடாமை காத்தலும் நுதலிற்று.

இ-ள்: தேன் என்னும் சொல் வல்லெழுத்து முதல் மொழி வருமொழியாய்வரின் ‘மீன்’ என்பதற்கு மேற்கூறிய திரிபுஉறழ்ச்சிநிலை ஒத்து முடிதலும், ஈற்று எழுத்துக்கெட்டு