54 ‘பெரும்புங் கவர்புகழ் போதா யனிசும் பிரமணியன் அரும்பும் குருகையில் கோதில் குலோத்துங்கன் [ஆரிடமாய் விரும்பும் பொருளைத் தரும்பிர யோகவிவே [கந்தன்னைக் கரும்பும் கனியும் எனப்பாடி னான்தமிழ் [கற்பவர்க்கே”. இது தன்னைப்பிறன் போலும் நாந்தி கூறுகின்றது. குருகையில் அரும்பும் எனக் காட்டுக. வடநூலார் தாமே பதிகமும் உரையும் செய்வார் இந்நூலும் வடநூலைத்தற்பவமாகச் செய்தலான் யாமும் பதிகமும் உரையும் செய்து உதாரணமும் காட்டினாம். இனிச் சம்பந்தர் சடகோபர் முதலாயினாரும் திவாகரரும், பதினெண் கீழ்க்கணக்குச் செய்தாரும் முன்னாகப்பின்னாகப் பதிகம் கூறுவதும் காண்க. பி.வி. 3 ஆம் நூற்பா நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான ஞான முனிவன்’ எனத் தம்மைச் சம்பந்தரும், சேராத எப்பொருட்கும் ஆதியாம் போதிக்கே ஆராத காதல் குருகூர்ச் சடகோபன்”. எனத் தம்மைச் சடகோபரும், ‘அங்கமல வயற்புனல்சூழ் ஆலிநாடன் அருள்மாரி அரட்டமுக்கி அடையார் சீயம் கொங்குமலர்க் குழலியர்வேள் கொற்றவேல் பரகாலன் கலியன்” எனத் தம்மைத் திருமங்கை மன்னனும் பிறர்போலத் திருக்கடைக்காப்புப் பாசுரத்தில் குறிப்பிட்டுள்ளமை |