பக்கம் எண் :

55

போன்ற செய்திகளைப் பிரயோக விவேக நூலார் உட்கொண்டு தம் நூலுக்குத் தாமே சிறப்புப்பாயிரம் எழுதியுள்ளார் என்பது காண்க.

இனிச் சிறப்புப்பாயிரம் நூற்கு இன்றிமையாதது என்னும் செய்தியை நன்னூலார்,

‘மாடக்குச் சித்திரமும் மாநகர்க்குக் கோபுரமும்
ஆடுஅமைத்தோன் நல்லார்க்கு அணியும்போல்- நாடிமுன்
ஐதுஉரையா நின்ற அணிந்துரையை எந்நூற்கும்
பெய்து உரையா வைத்தார் பெரிது’.           நன்-55

என்ற நூற்பாவால் குறிப்பிட்டுள்ளார்.

சண்முகனார், ‘கருவிளங்கிய மாநகரிற்கு உருவிளங்கிய வாயில்மாடம்’ முதலிய உவமங்களின் பெற்றியினை உள்ளவாறு உணராமல், நன்னூலார் ‘மாடக்குச் சித்திரம்’ முதலிய உவமங்கள் கூறியது பொருந்தாது; என்னை? பாயிரத்தின் பயன் அணிசெயல் ஒன்றேயாயின் சித்திரம் இல் வழியும் மாடம் எனவும், கோபுரம் இல் வழியும் நகர் எனவும், அணிஇல்வழியும் நல்லார் எனவும் கூறின் இழுக்கின்று ஆயினாற்போல, பாயிரம் இல்வழியும் பனுவல் எனப்பட்டு நூற்கு இன்றியமையாச் சிறப்பிற்று ஆதலை உணர்த்தாமல், ‘பாயிரம் இல்லது பனுவல் அன்றே’ என்ற முன்னோர் கருத்தொடு முரணும் ஆகலின் என்பது’ என விளக்கம் தந்துள்ளார்.

மாறன் அலங்கார நூலாசிரியர் சிறப்புப்பாயிரத்தின் இன்றியமையாமையை,

‘பாவிற்கு அணிபோல் பனுவல் தெளிவு உணர்ந்தோர்
நாவிற்கு வாய்மைபோல் நாரணம்ஆம்-தேவிற்கு
வாய்ந்த அருள்போல வாய்ந்ததே நூலகத்தாய்
ஏய்ந்த பொருட்பா யிரம்’           மாறன்-64

என்ற குறிப்பிட்டுள்ளது காண்க.