பக்கம் எண் :

56

இனிச் சிவஞான முனிவர் கூறுவன: சிறப்புப் பாயிரத்தில் முற்குறிப்பிடப்பட்டனவேயன்றி இத்துணைச் சிறப்பு இலவாய் அவ்வவற்றிகு இனமாய்க் காட்டப்படுவனவும் உள; அவை ஆக்கியோன் பெயரேயன்றி ஆக்குவித்தோன் பெயர் கூறுதலும். வழியேயன்றி அதன் வகையாகிய தொகுத்தல் முதலிய நான்கனுள் ஒன்றாமாறு கூறுதலும். தன் முதல் நூற்கு வழி கூறுதலும், அதுவந்த மரபுவழி கூறுதலும், பொதுஎல்லை கூறுதலேயன்றிச் செந்தமிழ் முதலியவற்றின் சிறப்பு எல்லை கூறுதலும், நூற்பெயரேயன்றிப் படலப்பெயர் ஒத்தின் பெயர் என்பன கூறுதலும், நூற்கு இயைபு கூறுதலேயன்றி நூலினுள் படலம் முதலியவற்றிற்கு இயைபு கூறுதலும், சம்பந்தம் காட்டுவார் மதத்தில் நூற்கும் நூல் நுதலிய பொருட்கும் கிழமை கூறுதலேயன்றி நூல் நுதலிய பொருட்கும் பயனுக்கும் கிழமை கூறுதலும், நூற்கும் நூல்செய்தோனுக்கும் கிழமை கூறுதலும், நூல் நுதலிய பொருளேயன்றிப் படலம் நுதலியதூஉம் ஒத்து நுதலியதூஉம் சூத்திரம் நுதலியதூஉம் கூறுதலும், கேட்போரேயன்றிப் கேட்பிப்போரைக் கூறுதலும் பயனேயன்றிப் பயனுக்குப்பயன் கூறுதலும் ஆம்;

பயனுக்குப் பயனாவது,

‘எழுத்தறியத் தீரும் இழிதகைமை தீர்ந்தான்
மொழித்திறத்தின் முட்டறுப்பா னாகும்-மொழித் திறத்தின்
முட்டறுத்த நல்லோன்முதனூல் பொருள்உணர்ந்து
கட்டறுத்து வீடுபெறும்’.

என்பதனாற் காண்க.

எனவே, முதல்நூல் பொருள் உணர்தற்கு முறையானே இது கருவிநூல் என்பது பெறப்பட்டது. முதல் நூல் வீட்டு நூல், ஈண்டுக் கேட்பிப்போர் இயற்றமிழ்