57 வல்ல ஆசிரியர். படலம் நுதலியது இவ்வதிகாரம் எந்நுதலிற்றோ எனின் என்பது. ஒத்து நுதலியது இவ்வோத்து எந்நுதலிற்றோ எனின் என்பது. சூத்திரம் நுதலியது இச்சூத்திரம் எந்நுதலிற்றோ எனின் என்பது. படலத்திற்கு இயைபு மேலை அதிகாரத்தினோடு இயைபு உடைத்தாயிற்று என்பது. ஒத்திற்கு இயைபு மேலை ஒத்தினோடு இயைபு உடைத்தாயிற்று என்பது. சூத்திரத்திற்கு இயபு மேலைச்சூத்திரத்தோடு இயைபு உடைத்தாயிற்று என்பது. இவை நூல்முகத்துக் காட்டப்படுதலே அன்றிப் படலமுகத்தும் ஒத்துமுகத்தும் சூத்திரமுகத்தும் காட்டவும்படும். இவையெல்லாம் பாயிரமேயாம். பிறவும் இவ்வாறே கண்டுகொள்க, என்பதையும் அவர் கூறியுள்ளார். சண்முகனார் ஆக்கியோன் பெயர் முதலியன வைக்கப்பட்ட முறைவைப்பை நன்கு விளக்கியுள்ளார். அதனையும் நோக்குவோம் ஆக்கியோனும் முதல் நூலும் அது வழங்கும் எல்லையும் நூல்செய்யும் முன்னரே அந்நூலுக்குக் காரணமாக நிற்றலின் முன் வைக்கப்பட்டன. அவை மூன்றும் வழிநூலாகிய காரியம் உளதாகற்கு இன்றியமையாத காரணமேயாயினும், ஆக்கியோன் அக்காரணங்களில் சிறந்த நிமித்த காரணன் ஆகலின் அவன் பெயர் முன்னும், முதல்நூல் முதற்காரணம் ஆகலின் வழி அப்பெயர்க்குப் பின்னும், எல்லை அம்முதல் நூல் பொருளின் வழக்குப் பயிற்சியினை உணர்த்தலின் அது வழியின் பின்னும் முறையானே வைக்கப்பட்டன. யாப்பும் நூற்பெயரும் நுதலிய பொருளும் நூலுடன் ஒற்றித்துத் தோன்றலின், அவை அவற்றின் பின் வைக்கப்பட்டன. அவற்றுள் யாப்பும் நுதலிய பொருளும் அறிதற்கு நூலே இடமாக நிற்றலின் நூற்பெயர் முன்னும், நூலது வகையே ஆதலின் யாப்பு அதன் பின்னும், அவ்வகையால் சொல்லப்பட்ட நூல் இடமாக அறியப்படு |