பக்கம் எண் :

58

தலின் நுதலிய பொருள் அவற்றின் பின்னும் வைக்கப்பட்டன.

கேட்போரும் பயனும் நூல் செய்யப்பட்ட பின்னரே பெறப்படுதலின், அவை அவற்றின் பின் வைக்கப்பட்டன. அவற்றுள் கேட்டற்கு உரியார் கேட்டு நன்று எனக்கொள்ளின் அன்றி அந்நூல் உலகம் கொள்ளாமையின், நூற்பயனை உலகம எய்துதற்குக் கேட்போரே காரணம் ஆகலான், அவர் பெயர் முன்னும் பயன் பின்னுமாக வைக்கப்பட்டன.

ஆக்கியோனும் கேட்போரும் எக்காலத்தினர்; யாண்டு இருந்தனர்; யாது காரணத்தால் இந்நூல் செய்தான் என்று அறியுமாறு மாணாக்கர்க்கு விருப்பம் செல்லல் இயல்பு ஆகலானும், நூல் செய்த காலத்தோ அல்லது பிற்காலத்தோ அரங்கேற்றப்பட்டது என்று கடாநிகழும் ஆகலானும், ஆணை செல்லும் அரசன் அவைக்களன் ஆயின் கேட்போர் இந்நூல் குற்றம் உடைத்து எனின் அந்நூல் கொள்ளாது ஒழியும்; அன்றேல் அவர் கூறினும் பயன் இன்றே என்றும் முந்து முந்துநூலைத் தொகுத்தல் முதலாய யாப்பின் எய்திய காரணம் அன்றிப் பிறகாரணமும் உளவோ என்றும் ஐயம் தோன்றும் ஆகலானும், நூல் செய்த காலமும் அதனை அரங்கேற்றிய களனும் ஏனைக் காரணமும் கூறல் இன்றியமையாதது என ஒருசார் ஆசிரியர் வேண்டினார் என்பது. இனிக் களன் கூறவே காலமும் அடங்காதோ எனின், நூல் செய்த காலத்திலேயே அரங்கேற்றல் வேண்டும் என்பது நியமம் ஆகாமையின், பிற்காலத்தும் கூடும் ஆகலின் அவ்விரு காலமும் வேறாதலும் உண்மையான் வேறு கூறப்பட்டது.

அவற்றுள் ஆக்கியோன் பெயர் வழி எல்லை என்ற மூன்றும் இறந்த காலத்தன. நூற்பெயர் யாப்பு நுதலிய