பக்கம் எண் :

59

பொருள் என்ற மூன்றும் நிகழ்காலத்தன. ஏனைய எதிர்காலத்தன.

இனி, ஆக்கியோன் பெயர் அன்றிச் செய்வித்தான் பெயரும் உரை செய்தான் பெயரும் கூறலும், தன் நூலுக்கே அன்றி அதன் முதல் நூலுக்கு வழி கூறலும், நூலுக்கே அன்றிப் படலம் ஒத்துச் சூத்திரங்கட்கும் பெயர் கூறலும், பெயரேயன்றித் தொகை முதலாய பிறவும் கூறலும், நூலது பிண்டத்திற்கேயன்றி அதற்கு உறுப்பாகிய படலம் ஒத்துச் சூத்திரங்கட்கும் இன்னது நுதலின எனக் கூறலும், நூல் கேட்போரைக் கூறலே யன்றி உரை கேட்போரையும் கூறலும், பயனேயன்றிப் பயனுக்குப் பயன் கூறலும், பாயிரம் கூறினார் பெயர் கூறலும், பாயிரத்துக்கு இலக்கணம் கூறலும், அவை போல்வன பிறவும், பாயிரத்தோடு ஒத்த இலக்கணத்த என்று கொள்ளப்படும்.

‘ஒத்த சூத்திரம்’ என்ற தொல்காப்பிய மரபியல் நூற்பா உரையில் பேராசிரியர் பாயிரம் ‘ஓத்த சூத்திரம்’ என்பதனால் கொள்ளப்படும் என்ற கூறிப் பாயிரத்தோடு ஒத்த இலக்கணத்தவாகிய சிலவற்றையும் கூறியுள்ளார்.

சிவஞானமுனிவர், பன்னருஞ் சிறப்பின் நல்லாசிரியனை உணர்ந்து வழிபட்டு ஒரு நூல்கேட்பான் புகுந்த நன்மாணாக்கர்க்கு அந்நூலான் நுவலப்படுப் பொருளும், நூல் கேட்டலான் பெறப்படும் பயனும், கேட்டற்குரிய அதிகாரிகள் ஆவார். இவர் என்பதூஉம், இன்னது முற்றிய பின்னர் இந்நூல் கேட்கற்பாற்று என்னும் இயையும் உணர்ந்தன்றி நூல் கேட்டற்கண் மனஊக்கம் செல்லாமையின் இன்றியமையாச் சிறப்பின ஆகிய இந்நான்கும் ஒருதலையாக முன்னர் உணர்த்தல் வேண்டும்; இந்நான்கும் உணர்ந்த வழியும் கற்றுவல்ல சான்றோர் அல்லோரால் செய்யப்பட்ட நூல் ஆயின்